என் மலர்

  செய்திகள்

  அபிராமம் அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
  X

  அபிராமம் அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அபிராமம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மனைவி முத்து ராக்கம்மாள் (வயது95). இவர் நேற்று வீட்டு வாசல் முன்பு அமர்ந்திருந்தார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த கருப்பணன் மகன் நீதிதேவன் என்பவர் முத்து ராக்கம்மாளிடம் பேசி கொண்டிருந்தார். திடீரென அவர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பினார்.

  இது குறித்து அபிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற நீதிதேவனை தேடி வருகிறார்.

  Next Story
  ×