என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் ரெயில் மோதி பெண் பலி
Byமாலை மலர்8 Sep 2016 12:02 PM GMT (Updated: 8 Sep 2016 12:03 PM GMT)
கோவையில் ரெயில் மோதி பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கோவை:
கோவை கணபதி சங்கனூர் ஈஸ்வர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார். வியாபாரி. இவரது மனைவி உமாவதி (வயது 43). இந்த நிலையில் குமார், அப்பகுதியில் வேறு வீட்டுக்கு குடியேற முடிவு செய்தார். அதன்படி இன்று புதிய வீட்டில் பால் காய்ச்சு விழா நடைபெற இருந்தது.
இதற்காக பழைய வீட்டில் இருந்து பொருட்களை எல்லாம் புது வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் உமாவதி இன்று காலை பழைய வீட்டில் இருந்து புது வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது டெக்கான் தோட்டம் என்ற இடத்தில் தண்டவாளத்தில் அவர் சென்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது. இதில் உமாவதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி கோவை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். உமாவதி உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story
×