search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு
    X

    தஞ்சையில் அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு

    தஞ்சையில் அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி மைதானத்தில் தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி 10-ந்தேதி தொடங்குகிறது.

    இதையொட்டி அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ள மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

    அரசின் திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் 30 அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இக்கண்காட்சி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடை பெறவுள்ளது. தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெறும். தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருவாய்த்துறை, காவல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, மாநகராட்சி, செய்தித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் தங்கள் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்த விவரங்கள் வைக்கப்படும்.

    இவ்வருடம் புதிதாக குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், ராட்டினங்கள், உணவகங்கள், 3டி கண்காட்சி, ஸ்நோ வோல்ட், 7 உலக அதிசயங்கள் போன்றவைகளும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளின் மாணவ-மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள், மாணவ-மாணவியர்கள், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பார்த்து பயன் பெற கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் வரதராஜன், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், துணை இயக்குநர் சொக்கலிங்கம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர் செல்வி, சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் சந்திரசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் பிரபாகரன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகபொறியாளர் மகாலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரணவனன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சி.மணி, ஆவின் மேலாளர் காமராஜ், சமூக நல அலுவலர் பாக்கியலெட்சுமி, தாட்கோ மேலாளர் தியாக ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சுருளிபிரபு, சுபாஷ் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×