என் மலர்

  செய்திகள்

  அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
  X

  அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  அலங்காநல்லூர்:

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் அதே ஊரைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் இறந்துவிட்டார்.

  இந்த சம்பவம் தொடர்பாக இவரது உறவினர்கள் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள சில பொருட்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

  இந்த நேரத்தில் அலங்காநல்லூரைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 26) என்பவர் திடீரென மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அரசு ஊழியர்கள் பணியை செய்யவிடாமல் தடுத்தார். வட்டார மருத்துவர் தனசேகரன் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், தகராறு செய்த காளிதாசை கைது செய்தார். இது சம்பந்தமாக மேலும் சிலர் மீது வழக்குபதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  Next Story
  ×