என் மலர்

  செய்திகள்

  சசிகலா புஷ்பாவின் கணவர்-மகன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  X

  சசிகலா புஷ்பாவின் கணவர்-மகன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் முன்ஜாமீன் கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

  சென்னை:

  அ.தி.மு.க. ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர், தி.மு.க. எம்.பி. சிவாவை தாக்கியது தொடர்பான பிரச்சினையில், அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டார்.

  இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

  அந்த மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சசிகலா புஷ்பாவுக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர். அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று பல காரியங்களை செய்கின்றனர்.

  தற்போது எங்கள் இருவர் மீதும் அண்ணாநகர் போலீசார், கொலை மிரட்டல், சிறுகாயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரர் யார் என்றே தெரியாது. போலீசார் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

  இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் மீது அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இல்லை என்று கூறினார். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

  Next Story
  ×