search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் குளியல் அறையில் பெண் எரித்துக்கொலை?: போலீசார் தீவிர விசாரணை
    X

    திருச்சியில் குளியல் அறையில் பெண் எரித்துக்கொலை?: போலீசார் தீவிர விசாரணை

    திருச்சியில் குளியல் அறையில் பெண் தீயில் கருகி உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சிசங்கிலியாண்ட புரம், கோவிந்தகோனார் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி பானுமதி (வயது 65). இவர்களுக்கு சாமிநாதன் (32) என்ற மகனும், ராஜலெட்சுமி (30) என்ற மகளும் உள்ளனர். இதில் ராஜலெட்சுமிக்கு திருமணமாகி காந்திமார்க்கெட் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.மகன் சாமிநாதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சாமிநாதன் ஊருக்கு திரும்பினார்.

    பானுமதி கோவிந்தகோனார் தெருவில் ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வந்தார்.முதியோர்உதவித் தொகை பெற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பானுமதி வீட்டினருகே உள்ள குளியலறையில் தீயில் கருகி உட்கார்ந்த நிலையில் பிணமாககிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் அசோக்குமார், பொன்மலை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும்போலீசார் விரைந்து சென்றனர்.

    பானுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பானுமதி தனியாக வசித்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
    ஆனால் உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தால் குளியலறையில் அங்கும், இங்கும் ஓடி இருப்பார். அது போன்ற அடையாளம் அங்கு இல்லை. மேலும் மண்எண்ணெய் பாட்டில் அல்லது கேன் எதுவும் குளியலறையில் காணப்படவில்லை. அதே போன்று உடல் கருகிய வாடை காலை 9 மணி வரை சுற்று வட்டாரத்தில் வீசியது.

    எனவே சம்பவம் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.மிகவும் நெருக்கடியான அப்பகுதியில் தீயில் உடல் வெந்த போது பானுமதி சத்தம் எழுப்பியிருந்தால் அக்கம் பக்கத்தில் கேட்டிருக்கும். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கூட எந்த அலறல் சத்தமும் கேட்க வில்லை.இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது.

    பானுமதியை யாரவது மர்ம நபர்கள் கொன்று, குளியலறையில் உடலை போட்டு எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை கொலை செய்து எரிக்க என்ன காரணம்? கொன்றது யார்? என்பது மர்மமாக உள்ளது.

    இது தொடர்பாக பானு மதியின் உறவினர்கள், மகன் சாமிநாதன் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. பானுமதி உடல் கிடந்த குளியலறையில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். குளியலறை சுவர், கதவு, தாழ்ப்பாள்ஆகியவற்றில் உள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு பானுமதியின் சாவில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×