என் மலர்

  செய்திகள்

  வேலூரில் நகை கடையில் செயின் திருடிய பெண் கைது
  X

  வேலூரில் நகை கடையில் செயின் திருடிய பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நகை கடையில் செயின் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.

  வேலூர்:

  வேலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 35). இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வேலூர் கஸ்பா, வசந்தபுரம் பகுதியை சேர்ந்த விஜயா (50) தனது உறவினர் ஒருவருடன் பாபுலாலின் நகை கடைக்கு நேற்று சென்றார்.

  கடையில் சிறிது நேரம் நகை வாங்குவது போல நகைகளை பார்த்து விட்டு டிசைன்கள் பிடிக்கவில்லை என்று பாபுலாலுவிடம் கூறிவிட்டு கடையை விட்டு வெளியே சென்றார். பின்னர் நகைகளை சோதனை செய்தபோது அதில் 1 பவுன் சங்கிலி காணாமல் போயிருந்தது. சந்தேகம் அடைந்த அவர் விஜயாவை பிடித்து அவரிடம் இருந்து அந்த தங்கச்சங்கிலியை கைப்பற்றினார். அவர் நகை திருடியது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. விஜயாவுடன் வந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

  இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயாவை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×