என் மலர்

  செய்திகள்

  கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
  X

  கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் பொள்ளாச்சி மேற்கு இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவிற்கு சென்ற காரை சோதனை செய்தபோது, அதில் 1 டன் ரே‌ஷன் அரிசி இருந்துள்ளது.

  இதையடுத்து, காரில் இருந்த கண்ணப்பன்நகரை சேர்ந்த மாதேஸ்வரன்(32), மாணிக்கம்(35) ஆகிய இருவரையும் விசாரணை நடத்தியதில் ரே‌ஷன் அரிசி கடத்தியதை ஒப்புக் கொண்டனர்.இதையடுத்து, இருவரையும், கைது செய்து, ரே‌ஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

  Next Story
  ×