என் மலர்

  செய்திகள்

  பூதலூரில் விபத்தில் சிறுமி பலி: பள்ளி பஸ் டிரைவர் கைது
  X

  பூதலூரில் விபத்தில் சிறுமி பலி: பள்ளி பஸ் டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூதலூரில் விபத்தில் சிறுமி பலியானார். பள்ளி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

  பூதலூர்:

  பூதலூர் தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியின் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் நந்தினி என்ற 4 வயது சிறுமி பலியானார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடல் பூதலூர் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின்னர் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

  இதனிடையே சம்பவம் நடந்த பள்ளியை தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ். தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பள்ளி பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ராமச்சந்திரன்(22) என்பவர் கைது செய்யப்பட்டு திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டார்.

  பள்ளியை பார்வையிட்ட பின்னர் பூதலூர் நான்கு சாலை பகுதிக்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி பள்ளி பெற்றோர்கள். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

  பின்னர் அவர் கூறும்போது, தனியார் பள்ளி வாகனங்களின் தன்மை குறித்தும் ஓட்டுநர்கள் உரிய உரிமம் பெற்ற அனுபவம் பெற்றவர்களா? என்பது குறித்தும் பள்ளி திறப்பதற்கு முன்பு விசாரணை மற்றும் நேரடி ஆய்வு செய்து அனுமதி தரப்படுகிறது.

  இந்த நிகழ்வுக்கு பிறகு மீண்டும் பள்ளி வாகனங்கள் அதன் ஓட்டுநர்கள் குறித்து மீள் ஆய்வு மேற்கொள்ளப்படும். பள்ளியில் நடந்த விபத்து குறித்து பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரின் கவனக்குறைவு குறித்து மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அளிக்கப்படும். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு குந்தகம் ஏற்படாத வகையில் பள்ளிதொடர்ந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

  விபத்து நடந்த பள்ளிக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×