என் மலர்

  செய்திகள்

  பள்ளிகொண்டாவில் ராணுவ வீரர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
  X

  பள்ளிகொண்டாவில் ராணுவ வீரர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிகொண்டாவில் ராணுவ வீரர் வீட்டில் 18 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அணைக்கட்டு:

  பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது38), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரமிளா (32) இவர்களுக்கு லித்திஷ், லித்தேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். மகன்களை பார்ப்பதற்காக 3-ந் தேதி இரவு ரமிளா வீட்டை பூட்டிவிட்டு கோவைக்கு சென்றார்.

  நேற்று அதிகாலை வீடு திரும்பிய ரமிளா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது.

  இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×