என் மலர்

  செய்திகள்

  காவு வாங்கும் இடமான கருப்பணசாமி கோவில்: தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பீதி
  X

  காவு வாங்கும் இடமான கருப்பணசாமி கோவில்: தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பீதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர் விபத்துகளை தடுக்க போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வடமதுரை:

  வடமதுரை அருகில் உள்ள கருப்பணசாமி கோவில் அருகே சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

  திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அருகில் உள்ள கருப்பணசாமி கோவிலை கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் அங்கு சென்று வழிபட்டு செல்வது வழக்கம். மேலும் பலர் வண்டியில் இருந்தபடியே காணிக்கைகளை வீசி வழிபட்டு செல்கின்றனர்.

  இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் சாலை ஓரம் வண்டியை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் ஆம்னி பஸ்கள், கார்கள், லாரிகள் ஆகியவை சென்றபடி இருப்பதால் சாலையோரம் நிற்கும் வாகனங்களை கவனிக்காமல் அதன்மீது மோதி விபத்தில் சிக்கி விடுகின்றன.

  நேற்று இரவு இதேபோல் சாலையோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது லால்குடியில் இருந்து சிமெண்ட் மூடைகளை ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது பயங்கரமாக மோதியது.

  இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவரான மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது34) என்பவர் படுகாயம் அடைந்தார். விபத்தில் சிக்கியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

  விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி அங்கிருந்து சென்று விட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வண்டி கருப்பணசாமி கோவில் அருகே இதுபோல அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது வாகன ஓட்டிகளை பீதி அடைய வைத்துள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை முறைப்படி உள்ளே நிறுத்த வேண்டும்.

  நெடுஞ்சாலையதுறையினர் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும். இல்லை எனில் காவு வாங்கும் இடமாக கருப்பணசாமி கோவில் அமைந்து விடும்.

  இந்த மாதத்தில் மட்டும் அதே இடத்தில் 4 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் மினி வேன் மோதி ஒருவர் உயிர் இழந்துள்ளார். எனவே தொடர் விபத்துகளை தடுக்க போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Next Story
  ×