search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பாசமுத்திரம் தொகுதி
    X
    அம்பாசமுத்திரம் தொகுதி

    அம்பாசமுத்திரம் தொகுதி கண்ணோட்டம்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இயற்கை எழில் சூழ்ந்த ரம்யமான பகுதி அம்பை சட்டமன்ற தொகுதியாகும்.
    தென் மாவட்டத்தின் முக்கிய அணைகட்டுகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் அமைந்த இந்த தொகுதியில்தான், தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது.

    இதனால் இயற்கை நீர்வீழ்ச்சிகளும், ஏரி குளங்களும் இங்கு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தின் தஞ்சைக்கு அடுத்து அதிக நெல் விளையும் சொர்க்கபூமி அம்பை சட்டமன்ற தொகுதியாகும்.

    கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தொடங்கும் அம்பை சட்டமன்ற தொகுதியில் விக்கிரமசிங்கபுரம் எனப்படும் சிங்கை நகராட்சி, அம்பை நகராட்சி என்ற 2 நகராட்சிகள் அடங்கி உள்ளது.

    அம்பாசமுத்திரம் தொகுதி

    இதுபோக சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூர் பேரூராட்சி பகுதிகளும், நெல்லை மாவட்டத்தின் உயர்ந்த மலைப்பகுதியான மாஞ்சோலை, ஊத்து, நாழுமுக்கு எஸ்டேட் பகுதிகளும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

    மலை சூழ்ந்த கிராமப் பகுதிகள் நிறைந்த இந்த பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். தெழிலாளர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இங்கு தனியார் நூற்பாலைகளும், காகித ஆலைகளும் பல உள்ளன.

    அம்பாசமுத்திரம் தொகுதி
    1952-ல் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலிலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்ட சொக்கலிங்கம் பிள்ளை, காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆகி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தொகுதியில் இதுவரை 15 முறை தேர்தல்கள் நடந்துள்ளன.

    அம்பாசமுத்திரம் தொகுதி

    இதில் 5 முறை காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க. 2 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1 முறை மட்டும் கம்யூனிஸ்ட் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    அம்பாசமுத்திரம் தொகுதி

    இந்த தொகுதியில் அதிக அளவில் தேவர் மற்றும் நாடார் சமுதாய மக்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக யாதவர், தேவேந்திரகுல வேளாளர்களும், பிள்ளைமார், இஸ்லாமியர்கள் மற்றும் பிராமணர், விசுவகர்மா சமுகத்தினர், செங்குந்த முதலியார், சேனைதலைவர்கள் என்று அனைத்து சமுதாய மக்களும் கலந்து உள்ளனர்.

    அம்பாசமுத்திரம் தொகுதி

    தற்போது இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 48 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 443 பேரும், பெண்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 601 பேர்களும், திருநங்கைகள் 4 பேரும் உள்ளனர்.

    அம்பாசமுத்திரம் தொகுதி இதுவரை
    அம்பாசமுத்திரம் தொகுதி இதுவரை

    1952- சொக்கலிங்கம் பிள்ளை- சுயேட்சை
    1957- கோமதி சங்க தீட்சிதர்-காங்கிரஸ்
    1962- கோமதி சங்க தீட்சிதர்காங்கிரஸ்
    1967- கோமதி சங்க தீட்சிதர்- காங்கிரஸ்
    1971- சங்குமுத்து தேவர்-காங்கிரஸ்
    1977- ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம்- மார்க். கம்யூ.
    1980- ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம்-மார்க். கம்யூ.
    1984- பாலசுப்பிரமணியன்- அ.தி.மு.க.
    1989- ரவி அருணன்- காங்கிரஸ்
    1991- முருகையா பாண்டியன்- அ.தி.மு.க.
    1996- ஆவுடையப்பன்- தி.மு.க.
    2001- சக்திவேல் முருகன்- அ.தி.மு.க.
    2006- ஆவுடையப்பன்- தி.மு.க.
    2011- இசக்கி சுப்பையா- அ.தி.மு.க.
    2016- முருகையா பாண்டியன்- அ.தி.மு.க.
    Next Story
    ×