search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    நெல்லை மாவட்டத்திற்கு கூடுதலாக 100 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன

    கூடுதலாக 100 வாக்குப்பதிவு எந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்கள், வி.வி. பாட் எந்திரங்கள் நெல்லை வந்தன.
    நெல்லை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதை யொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, பாளை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ராமையன்பட்டியில் உள்ள அரசு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதலாக பயன்படுத்துவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இன்று 100 வாக்குப்பதிவு எந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்கள், வி.வி. பாட் எந்திரங்கள் நெல்லை வந்தன. அவை ராமையன்பட்டியில் கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

    நெல்லை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் சுமார் 9 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 18 எந்திரங்கள் வீதம் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிக்கும் 90 எந்திரங்கள் கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அப்போது அனைத்து கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் தேர்தல் தாசில்தார் கந்தப்பன், தாசில்தார்கள் பகவதி பெருமாள், செல்வன், மக்கள் தொடர்பு அதிகாரி நவாஸ்கான் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து தாலுகா அலுவலகங்களில் வைத்து தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×