search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டர். பிரபு திலக்
    X
    டாக்டர். பிரபு திலக்

    ஆறுமனமே ஆறு: நட்பா.. காதலா.. மோகமா? 31

    சரி, இதற்கு விடை கண்டுபிடிக்கும் முன், இன்னொருத்தர் வாழ்க்கையில நடந்ததைப் பார்ப்போம். இது மகாலட்சுமி விஷயத்திலிருந்து முழுக்க முழுக்க வித்தியாசமானது.


    “வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், நாம் நேசிக்கப்படுகிறோம், நமக்காக நேசிக்கப்படுகிறோம், அல்லது நம்மை மீறி நேசிக்கப்படுகிறோம் என்பதுதான்"

    இந்த வாரம்நாம காதலை பற்றித்தான்பேசப்போறோம். அதனுடன்நட்பு, உறவு, மோகத்தை பத்தியும் அவற்றுக்கு இடையிலே இருக்கற வித்தியாசங்கள் பற்றியும் பேசுவோம்.

    மகாலட்சுமி என்னை சந்திக்ககறப்ப அவங்களுக்கு பதினாறு வயசு. (போ் மாத்தியிருக்கேன்) பிளஸ்1 படிச்சி கிட்டிருந்தாங்க. அவளோட வீட்டிலேயிருந்து பள்ளிக்கூடம் தூரம்ங்கறதனாலே தினமும் பஸ்சில்தான் போய் வருவா. அவ பஸ்ல ஏறும் ஸ்டாப்பில, அவ படிக்கிற பள்ளிக்கூடத்திலேயே படிக்கிற ஒரு பையனும் ஏறுவான். அவன் பிளஸ்2 படிக்கிறான். நாலு வருஷமாக தொடர்ந்து அவங்க இப்படி பஸ்ல சந்திச்சி வந்தாங்க. மகாலட்சுமி அவனை விரும்பத் தொடங்கினா. எல்லா காலத்துக்கும் அவனோடவே இருக்க விரும்பினா. ஆனா, அது நடக்குமோ நடக்காதோங்கற கவலையும் பயமும் அவளைப் பிடிச்சி ஆட்டியது. இதனாலே, அவள் படிப்பு பாதிக்கப்பட்டிச்சி

    அவ தன் நண்பர்களோட இதைப்பத்தி கலந்தாலோசிச்சா, சிலர் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற உணர்வு வெறும் மோகம்தான்னாங்க. சிலர் காதல்ன்னாங்க. காதலுக்கு நண்பர்கள் புரியும் உதவிதான் நாடறிந்த விஷயமாச்சே. சில தோழிகள் அந்த மாணவனும் அவளைக் காதலிப்பதாக கதைகள் சொன்னாங்க. நம்மூர் பாஷையில சொல்லணும்னா ஏத்திவிட்டாங்க. ஆனா, மகாலட்சுமிக்கு இன்னும் குழப்பம் தீர்ந்த பாடில்லை.

    நீங்கள் என்ன நினைக்கிறீங்க? மகாலட்சுமிக்கு ஏற்பட்ட உணர்வு காதலா, மோகமா?

    சரி, இதற்கு விடை கண்டுபிடிக்கும் முன், இன்னொருத்தர் வாழ்க்கையில நடந்ததைப் பார்ப்போம். இது மகாலட்சுமி விஷயத்திலிருந்து முழுக்க முழுக்க வித்தியாசமானது. மகேஷ்ங்கறவனோட விஷயம். (போ் மாத்தியிருக்கேன்) மகேசுக்கும் 16 வயசுதான். அவனோட வகுப்புல படிக்கிற சாந்தி, அவனுக்கு மிகவும் நெருக்கமான தோழி. சாந்தியின்அப்பாவுக்கு அரசாங்க வங்கியில வேலை. திடீா்ன்னு சாந்தியின்அப்பாவுக்கு வேறே ஊருக்கு டிரான்ஸ்பர் ஆயிட்டதால, அவர் குடும்பத்தையும் அழைச்சிகிட்டு போயிட்டாா். சாந்தியும்பள்ளிக்கூடத்தில் இருந்து சான்றிதழ் வாங்கிக்கிட்டு அப்பாவோட போயிட்டா.

    சாந்தி போனதிலிருந்து மகேஷ்ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானான். இன்னதுன்னு புரியமுடியாத ஒரு தொந்தரவு அவன்மனசிலே இருந்துகிட்டே இருந்தது. சாந்தியைப்பத்தியே சதா நேரமும் அவன் நினைச்சிகிட்டிருந்தான். அவள் விலகிப் போன பின்னாலதான் அவனுக்கே அவ எவ்வளவு நெருக்கமா இருந்திருக்கிறான்னு தெரிஞ்சது.

    ஆனாலும், சாந்தியின் பிரிவு ஒரு தோழியின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா? இதுல எதை எடுத்துக்கிறதுன்னு மகேசுக்குக் குழப்பம்.

    மகாலட்சுமிக்கும் மகேஷுக்கும் மட்டுமல்ல, இவங்களோட வயசுல இருக்கற எல்லா பொண்ணுங்களுக்கும் பையனுங்களுக்கும் இருக்கற குழப்பங்களும் கேள்விங்களும் தான் இதெல்லாம்.

    காதல், நட்பு, மோகம் இவைகளைப் பத்தி எவ்வளவோ இலக்கியப் படைப்புங்க, நாடகங்க, சினிமாவுங்க வந்துடிச்சி. அதுவும் நம்மூரில் காதல் இல்லாத சினிமாவுங்களே இல்லை. ஆனாலும், இன்னிக்கு வரையிலும் நம்பசங்களை வதைச்சி எடுக்கற ஒரு கேள்வியாத்தான் இதெல்லாம் இருந்துக்கிட்டிருக்கு.

    மனித வாழ்விலே அதிகம் பேசப்பட்டுள்ள, பேசப்படற விஷயம் காதல்தான்.ஆனாலும், ரொம்பக்குறைவாபுரிஞ்சுக்கப்பட்ட அம்சமும் காதல்ங்கறது தான் உண்மை. காதலுங்கறது என்னங்கறது மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு இருக்கற நிரந்தரக் கேள்வி. பலரும் அவங்கவங்க புரிதலுக்குத் தகுந்த மாதிாி வெவ்வேறு விளக்கங்களைக் சொல்லியிருக்கறாங்க. ஆனா, இன்னிக்கும் காதல் பத்தி பல தப்பான கருத்துங்க, குழப்பங்க நிலவறதைப் பார்க்கலாம்.

    காதல்ங்கற சொல்லை உயிரினங்களுடனான நமது உறவை விவரிக்கறதுக்கும் உயிரற்ற பொருட்களுடனான நமது உறவை விவரிக்கறதுக்கும்கூட பயன்படுத்துறோம். விருப்பம், ஆசை, மோகம், போற்றுதல், தேவை, காமம், காதல்னு இருக்கற எல்லாத்தையும் நம்மால பிரிச்சிப் பார்க்க முடியல.

    நண்பர்கள் அரட்டைகளிலே, “நான் காதலில விழுந்துட்டேன்’’ங்கறதை அடிக்கடி கேட்க முடியும். ஆனா, உண்மை என்ன? நாம காதலிலே விழறதில்லை, காதலிலே எழறோம். உண்மையான காதல் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். நம்மகிட்டே இருக்கற சிறப்பான விஷயங்களை வெளியில கொண்டு வரும். ஒத்திசைவையும் சந்தோசத்தையும் உண்டாக்கும். வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கும்.

    இந்த நூற்றாண்டிலே காதல், ஒருவரின் கட்டுப்பாட்டை மீறிய செயல் இல்லை. அது ஒரு தேர்வு. நான் ஏற்கெனவே சொன்னது போல நாமகாதலில விழதில்லை; காதலிக்கத் தேர்ந்தெடுக்கிறோம். காதல்வெறுமனே நிகழ்வதில்லை, நாம அதற்காக பல விஷயங்களைச் செய்ய வேண்டிய திருக்கு. உங்களுக்கு சிரிப்பு வரலாம், ஆனால், காதலிப்பதற்கு அதிக உழைப்பு வேண்டும் வேலைகளில ஒன்றுங்கறதுதான் உண்மை. வரலாற்றைப்படித்தால் நல்ல காதல் உறவுகள் விபத்தாக நேர்ந்தவை இல்லை; தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சாதனையாக்கப்பட்டவைங்கறது தெரியும்.

    நேர்மை, அன்பு, அறிவு, மரியாதை, சிரத்தை, பாதுகாப்பு எல்லாத்துக்கும் மேலாக, பொறுப்பு ஆகியவற்றோட உச்சமே உண்மைக் காதல். பொறுப்பே காதலை நிரந்தரமாக சுயத்தை விரிவுபடுத்தும் ஒரு அனுபவமாக ஆக்கும். காதலில் சொற்களைக் காட்டிலும் செயல்களே உரத்துப் பேசும்.

    ஆனால், நம்மூரில் என்னநடக்கு? தாங்கள் காதலிக்கறவங்களின் பேர்கூடத் தெரியாத நிலையிலயும் பலர் தாங்கள் காதல் கொண்டிருப்பதாக நினைக்கிறாங்க. இப்படி காதலாகத் தோன்றுவது, பல சமயங்களில் காதலே அல்ல என்று உணருவதற்கு மனமுதிர்ச்சியும் தன்னைத்தானே உள்நோக்கும் தன்மையும் தேவைப்படுது.

    எம்.ஸ்காட் பீக் என்னும் அறிஞர், காதலை, “தனது அல்லது வேறு ஒருவரது ஆன்மீக வளர்ச்சியைப் பேணும் நோக்கத்துக்காக தனது சுயத்தை விரிவுபடுத்தும் விருப்பமாக’’ வரையறுத்திருக்கிறார்.

    பல சமயங்களில நமக்குச் கொஞ்சமும் பொருந்தாத ஒரு துணைக்காக நாமகுட்டிக் கரணம் போடுவோம். இத்தகைய உறவு ஆன்மீக வளர்ச்சிக்கு கொண்டு செல்லாது. இது ஒரு தற்காலிக கட்டமே. நாமாக வழியத் தொடராத பட்சத்தில இந்த உறவிலிருந்து விரைவில்விடுபட்டு விடுவோம்.

    பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு காதல் இன்னும் பல பரிமாணங்களைக் கொண்டது என்பதை மறந்துவிட்டு, காதலை புனிதத்துடன் அல்லது தெய்வத்துடன் இணைத்துப் பார்ப்பதே. காதல் என்பது பிறரில் நம்மைக் கண்டறிவதும், அதனால ஏற்படும் மகிழ்வுமே.

    மகாலட்சுமி, சாந்தி என்ற இருவரின் காதல் அனுபவங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இவங்க இருவரையும் போல காதல்பற்றிய குழப்பத்துடன் இருக்கும்பல டீன்ஏஜ் பருவத்தினரை நான் சந்திச்சிருக்கேன். அவர்களிலே சிலரோட கதைங்களையும் சொல்றேன். இது காதல், நட்பு, உறவு மற்றும் மோகம் பற்றிய ஒரு தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும்னு நினைக்கிறேன்.

    மகாலட்சுமி விஷயத்திலே ரெண்டுபேரும் ஒரே பள்ளிக்கூடத்தில நாலு வருஷங்களாக ஒண்ணா படிச்சுக்கிட்டிருக்கிறாங்க. பள்ளிக்கூடத்துக்கு போறதும் ஒரே பேருந்திலதான். பிளஸ்2க்கு பிறகு பிரிவு ஏற்படும், அதுக்குப்பிறகு இந்த உறவு நீண்ட நாள் நீடிக்குமா, நீடிக்காதாங்கற கவலை ஏற்படுது.

    இங்கு முக்கியப் பிரச்சினை, எந்த உறவையும் நிரந்தரமாக்குவது பற்றி சிந்திக்கவும் முடிவெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் பதினாறு வயசுங்கறது சரியான தருணம் தானாங்கறது தான். காலப்போக்கில அவங்க மாறப்போறாங்க, பரிணமித்து முதிர்ச்சி அடையப்போறாங்க. அப்போது தேவைகளும் பார்வைகளும் இன்னிக்கு இருப்பதை விடவும் குறிப்பிடத்தக்க அளவிலேமாற்றம் அடையும்.

    பிளஸ்2க்குப் பிறகு கல்லூரி, வேலை தேடும் முயற்சி, அப்புறம் வேலை என்று பரபரப்பாக நாட்கள் ஓடும். இதற்காக அவங்க உள்ளார்ந்த பண்புகளையும் மன உறுதியையும் திறமைகளையும் பலங்களையும் மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதிகபட்ச வரம்புக்கும் சவாலுக்கும் அழைக்கும் காலகட்டத்தை இரண்டு பேருமே இனிமே தான் சந்திக்கப்போகிறாங்க. இயல்பாவே, அதன் முடிவிலேஅவங்க, தொடக்கத்திலே எங்கே இருந்தாங்களோ அங்கே இருக்க மாட்டாங்க.

    எனவே நான் மகாலட்சுமிகிட்டே சொன்னேன், “உங்க உறவை தற்போதுள்ள நிலையிலேயே வச்சிருங்க. இப்போதைக்கு உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்க. உங்களுக்கும் உங்கள் காதலனுக்கும் கொஞ்சம்கால அவகாசம் கொடுத்துப் பாருங்க. அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருக்கட்டும்”னேன்.

    காதலுக்கும் நட்புக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்ள தீபாவின் கதையைப்பார்ப்போம்.

    “எனக்கு பதிமூனுவயசு ஆகுது. எட்டாம் வகுப்பு படிக்கறேன். என்னோட படிக்கற மாணவன் ஒருத்தன் தினமும் ஒய்வு நேரங்களில் என் பக்கத்தில வந்து உட்கார்வான். நானும் அவன் கூடஉட்காா்ந்திருக்கறதுக்கும் பேசறதுக்கும் விரும்பறேன். இரண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருப்போம். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து போன பின்னாலேயும் நாம தொடர்ந்து நண்பர்களாக நீடிக்கணும்னு அவன் சொல்றான். எனக்கு அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. சரிங்கறதா அல்லது வேண்டாம்ங்கறதா?”ங்றது தீபாவின்கேள்வி.

    யாா் யாா் கூட இருக்கறப்ப நாம்ப நம்மை மனுஷராணருகிறோமோ, யாா் கிட்டே மனசாரப் பேசறோமோ அவர்களே நம்ம சிறந்த நண்பருங்க. யாராக இருந்தாலும், அவங்க கூட இருக்கறப்ப நாம் பாதுகாப்பா உணர்ந்தால மட்டுமே அவங்களோட தொடர்ந்து தொடர்பு கொள்ளவும், நாம் நாமாக இருக்கவும் முடியும். இத்தகைய சூழலை நமக்கு அளிக்கக்கூடிய எவரும் நமக்கு சிறந்த நண்பருங்கதான்.

    தீபாசொல்ல விரும்புவது என்னன்னா, அவள் நண்பன், வகுப்புத் தோழன் அவளை ஸ்பெஷல் தோழியாக இருக்கச் சொல்லிக் கேட்டால், அதை எப்படி எதிர்கொள்றதுங்கறதுதான். பொதுவா விடலைப் பருவத்தினர் இருபாலினரும் நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கணும். அப்பதான் மகிழ்ச்சியோட இருக்க முடியும். நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பவங்க, பொதுவா மனுஷங்க, ஸ்டீரியோடைப் இல்லை, ஒவ்வொரு வகையில வேறுபட்டவங்கங்கறதை புரிஞ்சிக்குவாங்க. இது வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் முக்கியமான ஒரு பாடம். இதன் அடிப்படையில்தான் வெற்றிகரமான உறவுங்க அமைய முடியும்.

    எனவே, தீபா வயசுக்காரருக்கு நான்சொல்லவிரும்பறது, நட்பினால நீளற கரங்களுக்கு தயங்காம“சரி’’ சொல்லுங்க. ஆனால், தனிப்பட்ட உரிமையா நட்பைக் கோரினால் “இல்லை’’ன்னு சொல்லுங்க. நிறைய நண்பர்களைக் கொண்டவங்களா இருங்க. பெரும்பாலோருடன் நட்போட பழகுங்க. ஸ்பெஷல் நட்பை அனுபவிக்க இன்னும்கொஞ்சம் வருஷங்க காத்திருங்க.

    தொடர்புக்கு:
    drpt.feedback@gmail.com

    Next Story
    ×