என் மலர்

  செய்திகள்

  சசிகலா தலைமையில் இன்று மாலை அ.தி.மு.க. எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
  X

  சசிகலா தலைமையில் இன்று மாலை அ.தி.மு.க. எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சசிகலா தலைமையில் நடைபெறுகிறது.
  சென்னை:

  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கூடியது.

  முதல் நாள் அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதற்கு மறுநாள் (24-ந்தேதி) ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர கூட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

  இன்று முதல் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்க சசிகலா முடிவு செய்துள்ளார்.

  இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறுகிறது.

  கூட்டத்தில் சசிகலா பங்கேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

  இந்த கூட்டம் முடிந்ததும் போயஸ்கார்டனில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சசிகலா ஆலோசனை வழங்க உள்ளார்.
  Next Story
  ×