என் மலர்

  செய்திகள்

  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
  X

  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ராஜாஜி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

  சென்னை:

  ரூபாய் நோட்டு பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

  சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இடம் மாற்றப்பட்டு சென்னை ராஜாஜி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதே போல் மாவட்ட தலை நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

  தி.மு.க. போராட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை கலந்து கொள்கின்றன. அண்ணாசாலையில் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள்.

  கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை மதுரையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

  இதேபோல் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×