search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் சரத்குமார் தலைமையில் இன்று நடந்தது.
    X
    சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் சரத்குமார் தலைமையில் இன்று நடந்தது.

    உள்ளாட்சி, சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு: சமத்துவ மக்கள் கட்சி தீர்மானம்

    உள்ளாட்சி, சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.

    கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் நடத்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்-அமைச்சர் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்பி, மக்கள் பணிகளை தொடர எல்லாம் வல்ல இறைவனை சமத்துவ மக்கள் கட்சி பிரார்த்திக்கின்றது.

    * தொடர்ந்து தமிழக முதல்வர் பற்றி வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * உச்சநீதிமன்ற வலியுறுத்தலிற்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு சுமூகமான நிரந்தரமான தீர்வை விரைவில் காணவேண்டும்.

    * ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தமிழக முதல்வர் கரத்தை வலுப்படுத்த சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் பணியாற்றி வெற்றிபெற பாடுபடும்.

    * தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி பெருவாரியான வாக்குகள் பெறுவதற்கு சமத்துவ மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×