என் மலர்
உத்தரப் பிரதேசம்
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் டாய் விங்கை 21-15, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பி.வி.சிந்து அரையிறுதியில் சக நாட்டு வீராங்கனையான உன்னாட்டி ஹூடாவை எதிர்கொள்கிறார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய அரியானா அணி 42-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது.
இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா அணி 12 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 61 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.
மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணி 34-33 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.
- உடலை வளைத்து நெளித்து 'பிரேக் டான்ஸ்' ஆடிய அவரை சுற்றி நின்று சில போலீஸ்காரர்களும், வக்கீல்களும் வேடிக்கை பார்த்தனர்.
- ஒரு சிலர் அவருடைய கொண்டாட்டத்தை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைதானார். தண்டனையாக அந்த வாலிபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டநிலையில் அபராதத்தை செலுத்துவதை தவிர்த்து சிறை தண்டனையை அந்த வாலிபர் ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அந்த வாலிபா் கன்னாஜ் நகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாத சிறை தண்டனைக்கு பிறகு அவர் விடுதலையாகி வெளியே வந்தாா். அப்போது விடுதலையை அந்த வாலிபர் நடனமாடி சந்தோசமாக கொண்டாடினார். உடலை வளைத்து நெளித்து 'பிரேக் டான்ஸ்' ஆடிய அவரை சுற்றி நின்று சில போலீஸ்காரர்களும், வக்கீல்களும் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் அவருடைய கொண்டாட்டத்தை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 33 ஆயிரம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இஸ்ரேலின் டேனில் டுபோவென்கோவை 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
லக்ஷயா சென் காலிறுதியில் சகநாட்டு வீரர் லுவாங் மைனமை எதிர்கொள்கிறார்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஈஷா சர்மாவை 21-10, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
பி.வி.சிந்து காலிறுதியில் சீனாவின் டாய் விங்கை எதிர்கொள்கிறார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உபி யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய உ.பி. யோதாஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள உ.பி.யோதாஸ் 7 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 43 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அணி 41- 35 என யு மும்பா அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.
- 1993 ஆம் ஆண்டு ராஜு என்ற 7 வயது சிறுவன் செப்டம்பர் 8 ஆம் தேதி காணாமல் போனார்.
- ராஜூவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் ராஜூ, 30 வருடங்களுக்கு பிறகு 37 வயதில் அவரின் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1993 ஆம் ஆண்டு சாஹிபாபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ராஜு என்ற 7 வயது சிறுவன் செப்டம்பர் 8 ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும் ராஜுவை கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜூவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நாள் முழுவதும் அவரை வேலை வாங்கி உண்பவதற்கு வெறும் ஒரே ஒரு ரொட்டி மட்டும் கொடுத்துள்ளனர். இரவில் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக ராஜூவை அவர்கள் கட்டி வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து ராஜு தப்பித்து டெல்லிக்கு சென்று போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம் இவரின் குடும்பத்தினரை கண்டறிய போலீசார் உதவியுள்ளனர்.
- அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை அங்கேயே நடத்தி கொள்ளலாம்.
- ஆண் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 3 தனியார் கல்லூரிகளில் சுமார் 2000 ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.
மேஜர் அங்கத் சிங் மகாவித்யாலயா, SBD அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் குல்கண்டி லாலராம் மகாவித்யாலயா ஆகிய மூன்று கல்லூரிகளில் முறைகேடுகள் நடந்ததாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த 3 தனியார் கல்லூரிகளில் நவம்பர் 21 அன்று முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சில தேர்வு அறைகள் முழுவதும் ஆண் மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளிலேயே செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ள இப்பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் கல்லூரியின் ஊழியர்களையே தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி நிர்வாகம் நியமிக்க முடியும்.
ஆகவே, பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி, முறைகேடுகளில் ஈடுபட்டு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த கல்லூரி நிர்வாகிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை அன்மோல் கார்பை 21-17, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய அரியானா அணி 38-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா 11 வெற்றி, 3 தோல்வி என 56 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் 39-37 என பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
- 2 இளைஞர்கள் காரின் சன்ரூப் வழியாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
- காயமடைந்த 2 இளைஞர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் காரின் சன்ரூப் வழியாக 2 இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோது காரில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கந்த்வேதா கிராமத்தில் திருமண வரவேற்பு ஊர்வலத்திற்கு வந்த காரில் 2 இளைஞர்கள் சன்ரூப் வழியாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது காருக்குள்ளே ஒரு பட்டாசு வெடிக்க அதன்பின் அனைத்து பட்டாசுகளை காருக்குள்ளே அடுத்தடுத்து வெடிக்க துவங்கியது.
இதனால் காருக்குள் தீப்பிடித்தது. இதனையடுத்து காயமடைந்த 2 இளைஞர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் இல்லை, தனியார் இன்ஜினீயர் என்று தெரியவந்தது.
- மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் மணப்பெண் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இந்திய சமூகத்தில் ஆண்- பெண் மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை ஆண்கள் திருமண வரன் தேடும்போது உள்ளாகும் அவஸ்தையிலிருந்து புலனாகும். அப்படியே ஒரு வரன் கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு கண்டிஷனுக்கு ஆளாக வேண்டி உள்ளதாக மகன்களை பெற்ற பெற்றோர் நோந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் மாப்பிள்ளை மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்கினாலும் அரசு வேலையில் இல்லை என்று கூறி மாலை மாற்றும் கடைசி நொடியில் மணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த இன்ஜினீயருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் என்றும் இடைத்தரகர் கூறியுள்ளார். கவர்மெண்ட் மாப்பிளை என்றதும் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கவே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் இல்லை, தனியார் இன்ஜினீயர் என்று மணப்பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது.

இதை மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் மணப்பெண் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே மாலை மாற்றும்போது அவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இரு வீட்டாரும், கல்யாணத்துக்கு வந்தவர்களும் பெண்ணை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். மாப்பிள்ளையும் அவசரமாக நிறுவனத்தை போன் மூலம் அணுகி தனது சம்பள ரசீதை பெற்று அதை பெண்ணிடம் காண்பித்தார்.
அதில் அவர் ரூ.1.2 லட்சம் மாத சம்பளமாக அந்த தனியார் நிறுவனத்தில் வாங்குவது உறுதியானது. ஆனாலும் கவர்மண்ட் மாப்பிள்ளை கனவிலிருந்த பெண் ஒரே அடியாகத் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இதனால் திருமண ஏற்பாட்டுக்கு ஆன செலவை இரு வீட்டாருக்கும் பகிர்ந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு அவரவர் அவரவர் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினர்.






