என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
- மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் 2,025 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வேல் வழங்கினர். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற முதல்வரின் கூற்று பொய்யாகும்.
* முதலமைச்சரின் எண்ணம் நடக்காது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.
* அ.தி.மு.க. வலுப்பெற்றுள்ளது, அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் மன்னராட்சி மீண்டும் அமைவதற்கு நாம் துணை நிற்க கூடாது.
* வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தலாக இருக்க வேண்டும்.
* எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களை தங்களது குழந்தைகளாக பார்த்தார்கள்.

* மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
* மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.
* அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வரக்கூடாது.
* அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. இந்த நிலை எந்த கட்சியிலும் இல்லை.
* 234 தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்திய கட்சி அ.தி.மு.க.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது தி.மு.க.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கால்நடை பூங்கா திட்டத்தை முடக்கினர்.
* ஏழைகளுக்காக கொடுக்கப்படும் திட்டத்தில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி?
* குடிமராமத்து திட்டத்தை கூட கைவிட்டு விட்டனர்.
* மக்களுடைய வரிப்பணத்தை தான் மக்களுக்கு கொடுக்கின்றனர்.
* அ.தி.மு.க. போராடும் என தெரிவித்த பின்னரே மகளிர் உரிமை தொகையை வழங்கினர் என்றார்.
- சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- நடவடிக்கை எடுக்க தவறினால் காவல்துறையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஐயனார் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தவறாக சித்தரித்து, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது 'குற்றவாளி' என்றும் சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 'சுவரொட்டி அடித்து ஒட்டிய' திராவிடர் பெரியார் கழக தலைவர் மா.பா.மணி அமுதன் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட வேண்டும் என்றும், தாங்கள் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் காவல்துறையை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
- தாய் உயிரிழந்த நிலையிலும் சுனில்குமார் என்ற 12-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் இத்தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் சுனில்குமார் என்ற 12-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இதனை சுட்டிக்காட்டி சில புகைப்படங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இதுதான் தமிழ்ச் சமூகம்!
கல்விதான் நம் உயிரினும் மேலானது!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!. என்று கூறியுள்ளார்.
- கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
- அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
சொந்த நலனுக்காக அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட்டார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்த நிலையில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அ.ம.மு.க. காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது.
* கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
* அ.ம.மு.க. கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கும் என்று தெரிந்துதான் நிர்வாகிகள் விலகுகின்றனர்.
* டி.டி.வி.யிடம் இருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று அ.ம.மு.க. நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
* டி.டி.வி.தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார்.
* அ.ம.மு.க. தொண்டர் பெயர்களை வெளியிட்டால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளதா? பலமாக உள்ளதா? என டி.டி.வி. புரிந்துகொள்வார்.
* அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அது குறித்து டி.டி.வி. கவலைப்பட வேண்டாம் என்று கூறி உள்ளார்.
- தமிழக அரசு, பெருந்தலைவர் பெயருக்கும் புகழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- பல ஆண்டுகளாக திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, பெருந்தலைவர் பெயருக்கும் புகழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளது. இது பெருந்தலைவர் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. இப்போது இந்த மார்க்கெட் பராமரிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் போது கலைஞர் நூற்றாண்டு மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
குறிப்பாக காமராஜர் காய்கறி மார்க்கெட் பெயர் மாற்றமில்லாமல் தொடரவும், ஏற்கனவே அகற்றப்பட்ட மகாத்மா காந்தி திருஉருவச் சிலையை காமராஜர் மார்க்கெட் அருகாமையிலேயே வைக்க வேண்டும் என்றும் வியாபாரிகளும், பொது மக்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இத்தனை ஆண்டுகளில் வட இந்தியாவில் எத்தனை உத்தர பாரத தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டுள்ளன?
- பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 3 அல்லது 30 மொழிகளைக் கற்பிக்க விரும்பினால் அதை செய்து கொள்ளுங்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்தியர்கள் இந்தி மொழியைக் கற்க வைப்பதற்காக தட்சிண் பாரத இந்தி பிரசார சபை அமைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் வட இந்தியாவில் எத்தனை உத்தர பாரத தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டுள்ளன?
உண்மை என்னவென்றால், வட இந்தியர்கள் தமிழையோ அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழியையோ பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கோரவில்லை. எங்கள் மீது இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்றுதான் கேட்கிறோம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 3 அல்லது 30 மொழிகளைக் கற்பிக்க விரும்பினால் அதை செய்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டை தனியாக விட்டுவிடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
- தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.
- ஆண்டு முழுவதும் விதவிதமான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்குவது வழக்கம்.
- மரம் முழுவதும் நீல வண்ண மலர்களாக பூத்து குலுங்குகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அருவிகள், நீரோடைகள் போன்றவை வருடம் முழுவதும் ரம்யமாக காட்சியளிக்கிறது.
மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும். இதுதவிர ஆண்டு முழுவதும் விதவிதமான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்குவது வழக்கம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உள்பட சீசன் காலங்களில் பூத்துக்குலுங்கும் விதவிதமான மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், கொடைக்கானல் போன்ற மலை வாழ் சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் மிகவும் விரும்புவது கோடை காலமாகும்.
இந்த கோடை வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக தற்போது மலைப்பகுதிகளில் ஜெகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது.
கொடைக்கானலில் இருந்து பழனி மற்றும் வத்தலக்குண்டு செல்லும் சாலைகளான பெருமாள்மலை, வடகவுஞ்சி, ஊத்து உள்ளிட்ட வெப்பம் அதிகமுள்ள கீழ்மலைப்பகுதிகளில் இந்த மரங்களின் இலைகள் முழுவதும் உதிர்ந்து, மரம் முழுவதும் நீல வண்ண மலர்களாக பூத்து குலுங்குகிறது. இது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்பொழுது பூக்கத்துவங்கும் இம்மலர்கள் இன்னும் சில மாதங்கள் முழுமையாக பூக்கும் தன்மையை அடைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை காலத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர்களை வெகுவாக ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
- ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்தவர் அய்யா வைகுண்டர்.
- "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்!
"எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஜல்லிக்கட்டில் 750 காளைகள் கலந்து கொண்டன.
- காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு இப்பகுதியைச் சேர்ந்த செங்கவள நாட்டார்களால் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கலந்து கொண்டன.
காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்ஸி மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களு க்கும் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு பரிசுகள் வழங்கினார். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது.
- கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது.
கோவை:
நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் ரூ.7.24 கோடி மதிப்பில் ரெயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நிறுவப்பட்டது.
கோவை-பாலக்காடு இடையிலான ரெயில் வழித்தடத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு லைன்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது. இதன்மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை தகவல்கள் வனத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு யானைகள் மீது மோதாமல் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவி வருகிறது.
இந்தநிலையில் மதுக்கரை அருகே நிறுவப்பட்டுள்ள ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறையை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் அருண் மற்றும் ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்களான பழங்குடியின பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த அமைப்பு நிறுவியது முதல் இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 2,500 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளன. இதுதவிர ரெயில்வே தண்டவாள பாதையில் இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு யானைகள் கடந்து சென்று வருகின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து நாட்டிலேயே முன்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தி வருகிறது என்றார்.
- வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
- 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகளை தினமும் பள்ளிக்கு சொந்தமான வேன், பஸ் மூலம் அழைத்து வந்து செல்கிறார்கள்.
இன்று காலையும் வழக்கம் போல் பள்ளி வேன் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள களரம்பட்டி பகுதிக்கு சென்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது அந்த வேனில் 16 குழந்தைகள் இருந்தனர்.
வேனை டிரைவர் சிவபெருமாள் என்பவர் ஓட்டி வந்தார். வேன் களரம்பட்டி சாலையில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 16 மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்து அலறினர்.
இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு மல்லியகரை போலீசார் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். பின்னர் போலீசார் ஜே.சி.பி. வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய பள்ளி வேனை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை ந்டத்தி வருகிறார்கள்.






