என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
- போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இது பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த மண்டபத்தில் மதுபோதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் வடசேரி போலீசாருக்கு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கோட்டார் வைத்தியநாத புரத்தை சேர்ந்த விக்னேஷ், செல்வபிரகாஷ், செல்வசூரியாபிரதீப், தெங்கம்புதூரை சேர்ந்த சந்தோஷ், தாழக்குடியைச் சேர்ந்த அஜித், பறக்கையை சேர்ந்த ஆறுமுக முத்துப்பாண்டி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அஜித், செல்வபிரகாஷ், ஆறுமுக முத்துப்பாண்டி, செல்வ சூரியா பிரதீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
- பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும்.
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநிகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும்.
- இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் (எண்: 313) வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை வழங்காமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த சத்துணவு ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்வி தடைபடாமலிருக்க பெருந்தலைவர் காமராசர் 1955ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அத்திட்டம் 1982ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,95,000 பணியாளர்களுடன் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 65,000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 லட்சம் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ– மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும். அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது அவர்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொடுங்கோன்மையாகும்.
மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்?
தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா? என்ற ஐயமும் எழுகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 1,95,000 சத்துணவுப் பணியிடங்களில் தற்போது 60,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.
ஆகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் தயாரிக்கும் பணியையும் சத்துணவுப் பணியாளர்களிடமே முழுவதுமாக ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மேலும், தற்போது காலியாகவுள்ள 60,000 சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், பணி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- சாட்டை சேனலில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும்.
- அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருச்சி துரைமுருகன் நடத்தும் சாட்டை வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை.
அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை- ED
- எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள தாக்கல் செய்ய உத்தரவு.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் "டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-களை தாக்கல் செய்ய வேண்டும்" என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள உத்தரவிட்டதாக தெரிவித்ததுடன், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
- டாக்டர் ஷீபாவிற்கு சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருது வழங்கப்பட்டது..
- பல ஆண்டுகள் சமூக நலனுக்காக மேற்கொண்ட பன்முகப் பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
டாக்டர் ஷீபா லூர்தஸ், தமிழ்நாட்டின் கருவூலமாக விளங்கும் இப்பெண் தனது தனித்துவமான பல்திறமைகளால் உலக அரங்கில் தமிழின் பெருமையை வளர்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான மனிதர்.
துபாயில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சாவால் டாக்டர் ஷீபாவிற்கு " சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருது " (Best Global Humanitarian Icon Award) வழங்கப்பட்டது. மனித நேயத்தின் உயர்தரத்திற்காக, பல ஆண்டுகள் சமூக நலனுக்காக மேற்கொண்ட பன்முகப் பணிக்கான விருதாக இது பார்க்கப்படுகிறது.

எழுத்து, தொழில்நுட்பம், கலை, அறிவியல், ஊக்குவிப்பு, சமூக சேவை என பல துறைகளில் தன்னை சமமாக வளர்த்துக் கொண்டவர் டாக்டர் ஷீபா. ஒரு எழுத்தாளராக அவர் இன்று வரை 250 நூல்களை எழுதி உள்ளார். அதில் பெரும்பாலானவை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் எழுதப்பட்டவை.
இந்த இலக்கிய பங்களிப்புக்காக அமெரிக்காவின் மேரிலாந்து சர்வதேச பல்கலைக்கழகம் டாக்டர் ஷீபாவுக்கு "இலக்கியத் தத்துவத்தில் கௌரவ டாக்டரேட்" (Honorary Doctorate of Philosophy in Literature) பட்டம் வழங்கியது.

அந்த மாநாட்டில் டாக்டர் ஷீபா வழங்கிய உரை ''திடமான எதிர்காலத்திற்கான பசுமை உலகத்தை நோக்கிய புதுமையும் திட்டங்களும் " என்ற தலைப்பில் இடம்பெற்றது.
பல்வேறு அமைப்புகளில் டாக்டர் ஷீபா பங்கு வகித்ததோடு பெண்கள் முன்னேற்றம், மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சி, கணினி கல்வி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு வருடமும் 45 மாற்றுத் திறனாளிகளை நிலைப்படுத்தும் வகையில் தன்னுடைய திறனும் ஆதரவும் வழங்கி வருகின்றார்.

பரதநாட்டியம் போன்ற இந்திய மரபுக் கலையை உலகமே அறிந்திருக்கும் வகையில் மேடைகளில் ஆடிப் பரப்பியுள்ளார். ஒரு நாட்டியக் கலைஞராக அவர் மட்டுமல்ல, உணர்வுகளின் மொழியாகவும், பண்பாட்டுத் தூணாகவும் திகழ்கிறார்.
இவை மட்டுமல்ல, இவர் 4 குழந்தைகளை தன்னுடைய சொந்த பிள்ளைகள் போல வளர்த்துக்கொண்ட ஒரு பாசமிகு தாயும். தனிப்பட்ட வாழ்க்கையைத் துறந்து, தனது முழு வாழ்வையும் சமூக நலனுக்காக அர்ப்பணித்துள்ளார். கல்வியற்ற சிறார்களுக்கு கல்வி வழங்க, ஏழைகள், பாதிக்கப்பட்ட பெண்கள், பார்வையிழந்தோர், மரணம் நோக்கி செல்கிற நோயாளிகள் என பல்வேறு சமூக பிரிவுகளுக்காக இவர் செய்த சேவைகள் எண்ணிக்கையற்றவை.

ஒரு பெண்ணின் வாழ்க்கை உலகத்திற்கு ஒளி வழங்கும் விளக்காக இருக்கலாம் என்ற எண்ணத்தையே டாக்டர் ஷீபா லூர்தஸ் தன்னுடைய வாழ்வின் மூலம் நிரூபித்துள்ளார். அவர் ஒரு பேரறிஞர் மட்டுமல்ல; ஒரு காலத்தை மாற்றும் சக்தியாகத் திகழ்கிறார்.
- தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
- இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6-30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தொகுதி மறு சீரமைப்பு, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து,
- நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்!
புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!
கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு.
திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!
- மாநிலங்களின் உரிமையை பறித்தது காங்கிரஸ்தான் என்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
- இதற்கு முன்பு அமைத்த மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல குழுக்கள் என்னவானது என்பதையும் விளக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:-
* தனது ஆட்சியில் நிகழும் தவறுகளை மறைக்க, போலி இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்ற பல நாடகங்களை அரங்கேற்றிய முதல்வர், தற்போது "மாநில சுயாட்சி" என்ற புதியதொரு மடைமாற்று வித்தையைக் கையிலெடுத்துள்ளார்.
* ஏற்கனவே திமுக ஆட்சியில் சட்டப்பேரவை செயல்படும் நாட்கள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், இதுபோன்ற நாடகங்கள் மக்கள் மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் உத்தியேயாகும்.
* உண்மையில் மாநிலங்களின் உரிமையை பறித்தது திமுக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் என்பது தேச வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
* மேலும், மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று கூறும் முதல்வர், இதற்கு முன்பு அமைத்த மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல குழுக்கள் என்னவானது என்பதையும் விளக்க வேண்டும்.
* எனவே, ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் நடத்தும் இதுபோன்ற அவசியமற்ற நாடகத்தைக் கண்டித்து, அனைத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும்- விசிக எம்.எல்.ஏ.
- கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் எ.வ. வேலு.
தமிழக சட்டசபையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் "முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, "கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதில் அளித்தார்.
- மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது.
- முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க, பா.ஜ.க. பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
50 ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது!
சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்கள்.
மாநில உரிமைகளைக் காக்கவும் -அதனை உறுதி செய்யவும் ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்து அறிவித்துள்ளார்கள்.
ஒன்றியத்தில் ஆள்வோர் அதிகாரக் குவியலில் ஈடுபடும் போதெல்லாம் தமிழ்நாடு தனது அழுத்தமான உரிமைக் குரலை எழுப்பி வருகிறது. மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது.
இந்த முக்கிய அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிடும் முன்னரே அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து அழிக்க முடியாத களங்கத்துக்கு ஆளாகி உள்ளனர்.
பாஜக உறுப்பினர்களையும் முந்திக் கொண்டு அவையை விட்டு வெளியேறி எஜமானர்களுக்கு தங்களின் அடிமை விசுவாசத்தை காட்டி உள்ளனர்.
ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய மாநிலங்களின் குரலாக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.






