என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கி உள்ளோம்.
- நீலகிரி வந்தால் தங்கி பார்க் செல்வது, நடைபயிற்சி செல்வது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டால் தெரியாது, ஆனால் இப்போது யார்? என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.
* நம்முடைய ஆட்சி வந்த பிறகு நல்லா develop ஆகிக்கொண்டு இருக்கிறது.
* வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கி உள்ளோம்.
* நிறைய மெடல், அவார்டு வாங்கிக்கொண்டு இருக்கிறோம்.
* நீலகிரி வந்தால் தங்கி பார்க் செல்வது, நடைபயிற்சி செல்வது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவ மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
- ஆட்சி முடியும் தருவாயில் கூட காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது.
சென்னை :
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவுகிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றில் நிலவும் குறைகளைச் கட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்பதும், அதற்கு தி.மு.க. அரசு சப்பைக்கட்டு சுட்டி பதில் அளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த ஆண்டு மொத்தமுள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரவுக் குறைபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தேரிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஒன்றே தி.மு.க. அரசு எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், தோல் மருத்துவம் உள்ளிட்ட 96 சதவிகித துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும், உதாரணத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 19 துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்றும், இதேபோன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 8 துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் புள்ளி விவாங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அளித்த மேற்படி தரவுகளின் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையம் தற்போது விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்வி இயக்குநர், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், பெரும்பாலானோர் ஒரு சில நாட்களில் பணியில் சேர்ந்து விடுவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை மருத்துவர்களுக்கான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய நேரத்தில் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு அளிக்காததன் காரணமாக, தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது இயலாத ஒன்று என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 விழுக்காடு அளவுக்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், 2023 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வே இப்பொழுதுதான் முடிந்து இருக்கிறது என்றும், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த தவறிவிட்டது என்றும் அரசு மருத்துவர்களுக்கான பல்வேறு சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அரசு மரு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்காக ஒரு கோடி ரூபாய் வரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மீது அபராதம் விதிக்க சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 34 கோடி ரூபாய் மக்கள் பணம் விரயம் என்பதோடு, மருத்துவ மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று சொல்லிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கூட காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிலாவது அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.
பல நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 500 வரை சென்று இதுவரை இல்லாத உச்சமாக பதிவானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்ட தங்கம், நேற்று மீண்டும் அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலை நேரத்திலும் விலையில் மாற்றம் இருந்தது. கூடுதலாக கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.
அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,805-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840
12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000
11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-05-2025- ஒரு கிராம் ரூ.109
12-05-2025- ஒரு கிராம் ரூ.110
11-05-2025- ஒரு கிராம் ரூ.110
10-05-2025- ஒரு கிராம் ரூ.110
09-05-2025- ஒரு கிராம் ரூ.110
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்துள்ளது.
இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1000 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.
- எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ள முதலமைச்சர் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கூறி இருந்தேன்.
* உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என 2019 தேர்தலின்போது வாக்குறுதியாகவே சொன்னேன்.
* யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.
* சொன்னது போல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம்.
* செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. அவர் சொல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
* ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்கு தான் ஆதரவு தெரிவித்தோம்.
* எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார்.
* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.
* எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித்ஷாவை சென்று பார்த்தார் என்பது நாட்டிற்கே தெரியும்.
* கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது அதற்கும் தானே காரணம் என இ.பி.எஸ் கூறுவாரா? என பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும்.
- முக்கியமான வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அபராதத்துடன் கூடிய சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும்.
இதேபோன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த முக்கியமான வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஊட்டி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- வளர்ப்பு யானைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடைபெற்றது. வருகிற 15-ந்தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.
இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர், 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்தார்.
நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார்.
அதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனமாடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவர், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் பாகன்கள் குடும்பத்தினருக்கு ரூ.5.06 கோடி செலவில் கட்டப்பட்ட 44 வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானம் திறந்து வைத்தார்.
பின்னர் அவர், பாகன் மாறன், கமலா தம்பதியிடம் வீட்டுக்கான சாவியை வழங்கினார். மேலும் அவர், அதே பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.
அதன்பிறகு அவர், லண்டானா, உன்னி செடிகளின் குச்சிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட யானைகளின் உருவங்களை பார்வையிட்டார். மேலும் தமிழக வனத்துறை சார்பில் வனச்சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 32 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் வனவிலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.5 கோடியில் முதுமலை வனப்பகுதி வழியாக (வான்வெளி தொகுப்பு கம்பிகள்) உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வளர்ப்பு யானைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பொம்பன், பெள்ளியை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர், வனத்துறை அதிகாரிகளிடம் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.
முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உதகையில் நடைபயிற்சி மேற்கொண்டார். மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
நீலகிரி எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவும் உடன் இருந்தார்.
- தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது. இதனால் நாள்தோறும் மின்சார ரெயில்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இது ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. புதிய சார்ஜிங் மையம் பொறுத்தவரையில் சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'பயணிகள் வசதிக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரெயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது' என்றனர்.
- வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன.
- மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. பகல் நேரங்களில் சூரியனின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க வீடு, அலுவலகங்களில் பெரும்பாலானோர் தஞ்சம் அடைகின்றனர். தவிர்க்கமுடியாத காரணத்துக்காக வெளியே வருபவர்களும் மரத்தின் நிழலிலும், மேம்பாலங்களின் கீழேயும், பஸ் நிறுத்தங்களிலும் என சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு பின்னர் செல்கின்றனர். வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன. இதில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு மக்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், 'கோடைகால வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது. இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. மத்திய அரசு இப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
சென்னை:
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். அப்படி இல்லையென்றால், ஏற்கனவே தெரிவித்து இருந்த தேதியில்தான் தேர்வு முடிவு வெளியாகும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றுள்ளார்.
- வருகிற 15-ந் தேதி 127-வது ஊட்டி மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. 15-ந் தேதி தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது.
மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி சென்றுள்ளார். ஊட்டிக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் கோத்தகிரி, கட்டப்பெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தார். அங்கு யானைகளுக்கு கரும்பு, மூலிகையுடன் கூடிய சத்து நிறைந்த உணவுகளை வழங்கி முகாமை பார்வையிட்டார். இதை தொடர்ந்து அங்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை கிராமத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். இதுதவிர முதுமலையில் படமாக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.






