search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudumalai Elephant Camp"

    • அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.
    • அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பலா மரங்களில் ஏராளமான பிஞ்சுகள் காய்த்துள்ளன. இதை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு வந்து, இங்குள்ள வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு வரும் யானைகள் அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை முள்ளூர் கிராம பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் அங்கு வீடுகள் உள்ளதால், கிராமத்துக்குள் யானை நுழைந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனா். மேலும் காட்டு யானை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • யானைகள் பூஜை செய்து விநாயகரை வழிபட்டன.
    • யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நாடுமுழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ெகாண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானை கள் முகாமிலும் விநாயகா் சதுா்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி அபயாரண்யம் மற்றும் தெப்பக்காடு முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பாகன்களை காலையிலேயே குளிப்பாட்டி, அதற்கு அலங்காரம் செய்தனர். பின்னர் யானைகளுக்கு பரிவட்டம் கட்டி, அனைத்து யானைகளையும், முகாமின் நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நிறுத்தி வைத்தனர்

    பின்னர் பழங்குடியினரின் பாரம்பரிய இசை முழங்க மசினி, கிருஷ்ணா யானைகள் மணியடித்தபடி கோவிலை 3 முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கி பூஜை செய்தன.பூஜைகள் முடிந்த பின்னர் யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.

    இதில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தலைமையில் வனச்சரக அலுவலா்கள் மற்றும் வன ஊழியா்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.இதுதவிர சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களும் யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தில் கலந்து கொண்டனர்.

    ×