முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

யானைகள் பூஜை செய்து விநாயகரை வழிபட்டன.யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
Published on

ஊட்டி,

நாடுமுழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ெகாண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானை கள் முகாமிலும் விநாயகா் சதுா்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி அபயாரண்யம் மற்றும் தெப்பக்காடு முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பாகன்களை காலையிலேயே குளிப்பாட்டி, அதற்கு அலங்காரம் செய்தனர். பின்னர் யானைகளுக்கு பரிவட்டம் கட்டி, அனைத்து யானைகளையும், முகாமின் நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நிறுத்தி வைத்தனர்

பின்னர் பழங்குடியினரின் பாரம்பரிய இசை முழங்க மசினி, கிருஷ்ணா யானைகள் மணியடித்தபடி கோவிலை 3 முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கி பூஜை செய்தன.பூஜைகள் முடிந்த பின்னர் யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.

இதில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தலைமையில் வனச்சரக அலுவலா்கள் மற்றும் வன ஊழியா்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.இதுதவிர சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களும் யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com