என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதுமலை யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கிய முதலமைச்சர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றுள்ளார்.
- வருகிற 15-ந் தேதி 127-வது ஊட்டி மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. 15-ந் தேதி தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது.
மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி சென்றுள்ளார். ஊட்டிக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் கோத்தகிரி, கட்டப்பெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தார். அங்கு யானைகளுக்கு கரும்பு, மூலிகையுடன் கூடிய சத்து நிறைந்த உணவுகளை வழங்கி முகாமை பார்வையிட்டார். இதை தொடர்ந்து அங்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை கிராமத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். இதுதவிர முதுமலையில் படமாக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.






