என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

    முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். அப்படி இல்லையென்றால், ஏற்கனவே தெரிவித்து இருந்த தேதியில்தான் தேர்வு முடிவு வெளியாகும்.

    Next Story
    ×