என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
- அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி பங்கேற்று பூஜையை தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் அழகுமீனா, மாவட்ட கல்வி துறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டார தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் மற்றும் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தக்கலையில் வசந்த் அன்கோவின் 130-வது கிளை இன்று திறக்கப்பட்டது. வசந்த் அன்கோ பார்ட்னர் விஜய்வசந்த் எம்.பி. புதிய கிளையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார்.
- தனது தாயின் தோழி பராமரிப்பில் கடந்த 3ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
போரூர்:
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதி அறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு கே.கே. நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாடிக்கையாளர் ஒருவருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வந்த கே.கே நகரை சேர்ந்த அஞ்சலி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 3பேர் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார். இதனால் சிறுமி கே.கே. நகரில் உள்ள தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் கடந்த 3ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அஞ்சலி ஆசைவார்த்தை கூறி சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி பலருக்கு விருந்தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சுதர்சன் ரெட்டி தனது முதல் பயணத்தை தமிழகத்துக்கு வரும் வகையில் திட்டமிட்டுள்ளார்.
- சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களை சுதர்சன் ரெட்டி சந்திக்க உள்ளார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு முதலில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.
அதன்படி சுதர்சன் ரெட்டி தனது முதல் பயணத்தை தமிழகத்துக்கு வரும் வகையில் செய்து உள்ளார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். நாளை காலை அவர் முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் அல்லது முதலமைச்சரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோருவார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.
நாளை மாலை சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களை சுதர்சன் ரெட்டி சந்திக்க உள்ளார். அப்போது எம்.பி.க்களுக்கு அவர் விருந்து அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- முதிர்ச்சியற்ற வகையில், மிஷனரி வார் ரூம் எழுதிக் கொடுத்த வசனத்தை ஏகத்தாளமாக பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது.
- வாக்கு வங்கி அரசியலுக்காக நீங்கள் நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் போன்ற இளைய தலைமுறையினர், மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள், அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அந்த அடிப்படையில் நடிகர் விஜய் அவர்களை பா.ஜ.க. வரவேற்றது.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்தில் திடீர் முதல்வராக கற்பனை செய்து கொண்டு அரசியல் தராதரம் இல்லாமல், முதிர்ச்சியற்ற வகையில், மிஷனரி வார் ரூம் எழுதிக் கொடுத்த வசனத்தை ஏகத்தாளமாக பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை பாராட்டுவதாலும், கொள்கை தலைவர்கள் என்று சாதிக்கு ஒரு தலைவர்களாக தமிழகத்திற்கு தியாகங்கள் செய்த தலைவர்கள் படத்தையும் போட்டு, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும், வீரத்தையும், தியாகத்தையும் படிக்காமல், மக்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக நீங்கள் நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இனியாவது வருகின்ற காலங்களில் விளம்பர அரசியலுக்காக, உலக அரசியலுக்கே வழிகாட்டி மேகமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியையும், உலகத்தின் தலைசிறந்த மக்கள் நலம் சார்ந்த தொண்டு நிறுவனங்களின் முதன்மை அமைப்பாக விளங்கும் புனிதமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் விமர்சித்து வெளிநாட்டு மிஷனரிகளை திருப்தி செய்து வருமான அரசியலுக்காக நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தையும், அதை நம்பி வந்த லட்சக்கணக்கான இளைஞர்களையும் நல்வழிப் பாதையில் செயல்பட மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள்.
- அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அமைச்சர் கே.என். நேரு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர், நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.
கடந்த 15 வருடங்களாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பா.ஜ.க. பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியவில்லை. தி.மு.க. கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் 3 முறை வந்த அமித்ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அதுகுறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை. அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது. உண்மையில், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் பானக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பா.ஜக வினரும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, நாங்கள் ஜெயித்துவிடுவோம், ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.
முதலமைச்சரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நடைபெறவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் தான், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் பல்வேறு பிரச்சினைகளை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டும் பணிகள் சூடு பிடித்துள்ளன.
- அடுத்த கட்டமாக மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 9-ந்தேதி டெல்லி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு உள்ளார்.
வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்ட தொடங்கி உள்ளனர். இந்தியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழர் என்பதால் கட்சி பேதமில்லாமல் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் அந்த வேண்டுகோளை தி.மு.க. நிராகரித்து விட்டது. இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கப் போவதாக அறிவித்து விட்டது.
இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முதல் ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரையும் அவர்களது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசி தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, நட்டா ஆகியோரது வீட்டுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்று பேசினார். அப்போது அவருடன் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்தே உடன் சென்று இருந்தார்.
வினோத் தவ்தே துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே சி.பி.ராதாகிருஷ்ணனை உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேச எம்.பி.க்களுடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசி தங்களது ஆதரவை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்றும் டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக அவர் சில மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வர முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் ஆதரவு திரட்ட வருவாரா? என்ற கேள்வி முதலில் எழுந்தது. எனவே சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக வருகை சந்தேகமாகவே இருந்தது.
ஆனால் அடுத்த வாரம் அவர் தமிழ்நாட்டுக்கு வர இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி பா.ஜ.க. தரப்பில் கூறும் போது, சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த வாரம் சென்னை வருவது உறுதியாகி உள்ளது. தேதி மட்டும் இன்னும் உறுதியாகவில்லை என்றனர்.
சென்னையில் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோருவார் என்றும், வேறு யார் யாரை சந்திப்பார் என்ற தகவல் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.
இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டும் பணிகள் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் நேரில் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
அதுபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
- இதுவரை 45 தொகுதிகளில் தி.மு.க.வின் கள நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்து உள்ளார்.
- தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்காக வைத்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க.வின் ஒவ்வொரு பிரிவிலும் சுறுசுறுப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அதோடு தொகுதி வாரியாக ஆய்வு செய்யும் பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். "உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடந்து வருகிறது.
இதுவரை 45 தொகுதிகளில் தி.மு.க.வின் கள நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்து உள்ளார். இதற்காக ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
தொகுதி கள நிலவரம், மக்கள் மனநிலை, தி.மு.க.வுக்கு இருக்கும் செல்வாக்கு, தொகுதியில் உள்ள குறைகள் போன்றவற்றை இந்த சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின் கேட்டு அறிகிறார். அதற்கு ஏற்ப அவர் தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) ஆரணி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் ஆரணி தொகுதி நிர்வாகிகளை வரவழைத்து அவர் சந்தித்து பேசினார். அப்போது ஆரணி தொகுதி கள நிலவரங்களை கேட்டு அறிந்தார்.
ஆரணியில் தேர்தல் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.
- மகளை இழந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மூவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி ஜெயசந்திரன் நிபந்தனை விதித்தார்.
மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் பெயில் அப்ளிகேசன் போட்டிருந்தார்கள்... நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் பெயில் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் அவர்களுக்கு பெயில் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் 55 நாட்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், கவின் குடும்பத்தினருக்கு கண்டிசன் பெயில் கொடுத்துவிட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நான் சொல்லும் கருத்துக்கள் என்னவென்றால், என் மகளை இழந்துவிட்டேன். அந்த வேதனையில் இருந்து எப்படி வருவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு சட்டத்தில் இவ்வளவு தான் வழியா.. இவ்வளவு தான் காலஅவகாசமா.. அப்படி என்று நினைக்கும் போது,வருத்தமாக இருக்கு. இதனை எப்படி சொல்வது என்று தெரியலை. நீதியரசர்களும் பார்த்து, தயவு கூர்ந்து, என் பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். பெண்ணுக்கான நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றார்.
- இந்தியாவில் அதிகார குவிப்பு நடந்து வருவதாக சர்க்காரியா கமிஷன் கூறியது.
- ஆளுநர் நியமனம் தொடர்பான நியாயமான ஆலோசனையை கூட மத்திய அரசு இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
* தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளது.
* இந்திய அளவில் பல துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* சமூகநீதியை சுற்றியே தமிழகத்தின் அரசியல் உள்ளது.
* ஜனநாயக கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிறோம்.
* மாநிலங்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட கூடாது.
* இந்தியாவில் அதிகார குவிப்பு நடந்து வருவதாக சர்க்காரியா கமிஷன் கூறியது.
* சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் வாயிலாக மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து வருகின்றன.
* அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது.
* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து இடையூறு அளிக்கிறது.
* மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் பா.ஜ.க. ஆளாத மாநில முதல்வர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
* இந்தியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டம் நடத்தி தமிழகம் வென்றுள்ளது.
* தமிழகத்தில் இருந்து எழுந்த மாநில சுயாட்சி முழக்கம் தற்போது பல மாநிலங்களில் எழுந்துள்ளது.
* ஆளுநர் நியமனம் தொடர்பான நியாயமான ஆலோசனையை கூட மத்திய அரசு இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை.
* தமிழ்நாட்டைப்போல் கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தற்போது இருமொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளது.
* இந்தியாவின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் மாநிலங்களின் சுயாட்சிக்கு குரல் கொடுக்க வேண்டும்.
* மாநிலங்கள் தன்னிறைவு பெற்று புதிய இந்தியா உருவாகும் என நம்புகிறேன்.
* மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற நிலை தொடர தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
- சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னை கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மின்சாரம் பாய்ந்து பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பலியான வரலட்சுமி பணியாற்றிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் அவரது கணவருக்கும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டனர்.
- மத்திய அரசு மாநில அரசுகளுடன் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தின் அடிப்படையில் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே சமூகநீதி.
* பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய சிந்தனையை வலியுறுத்திய திருவள்ளுவர், கணியன் பூங்குன்றன் வாழ்ந்த மண் இது.
* பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டனர்.
* பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்.
* மத்திய அரசுக்கும் அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது, ஆனால் நமக்கான நிதிப்பகிர்வோ மிகவும் குறைவு.
* குறுகிய அரசியல் நோக்கத்துடன் தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலேயே நிதிப்பங்கீடு அளிக்கப்படுகிறது.
* மத்திய அரசு உரிய வரி பங்கை அளிக்காமல் குறுகிய மனதுடன் நடந்து வருகிறது.
* நான்கரை ஆண்டுகளாக பல நெருக்கடிகளை மீறி சிறப்பான ஆட்சியை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.
* மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை காங்கிரஸ், வி.சி.க., இந்திய முஸ்லீம் லீக் கட்சிகளுடன் தி.மு.க.வும் சேர்ந்து கண்டித்தது.
* மத்திய அரசு மாநில அரசுகளுடன் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
- வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமிக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் 'எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க...' என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது.






