என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு... மாநில அரசுகளுக்கு ரத்த சோகை- மு.க.ஸ்டாலின்
    X

    அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு... மாநில அரசுகளுக்கு ரத்த சோகை- மு.க.ஸ்டாலின்

    • இந்தியாவில் அதிகார குவிப்பு நடந்து வருவதாக சர்க்காரியா கமிஷன் கூறியது.
    • ஆளுநர் நியமனம் தொடர்பான நியாயமான ஆலோசனையை கூட மத்திய அரசு இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை.

    சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

    * தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளது.

    * இந்திய அளவில் பல துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * சமூகநீதியை சுற்றியே தமிழகத்தின் அரசியல் உள்ளது.

    * ஜனநாயக கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிறோம்.

    * மாநிலங்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட கூடாது.

    * இந்தியாவில் அதிகார குவிப்பு நடந்து வருவதாக சர்க்காரியா கமிஷன் கூறியது.

    * சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் வாயிலாக மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து வருகின்றன.

    * அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது.

    * எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து இடையூறு அளிக்கிறது.

    * மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் பா.ஜ.க. ஆளாத மாநில முதல்வர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

    * இந்தியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டம் நடத்தி தமிழகம் வென்றுள்ளது.

    * தமிழகத்தில் இருந்து எழுந்த மாநில சுயாட்சி முழக்கம் தற்போது பல மாநிலங்களில் எழுந்துள்ளது.

    * ஆளுநர் நியமனம் தொடர்பான நியாயமான ஆலோசனையை கூட மத்திய அரசு இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை.

    * தமிழ்நாட்டைப்போல் கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தற்போது இருமொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளது.

    * இந்தியாவின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் மாநிலங்களின் சுயாட்சிக்கு குரல் கொடுக்க வேண்டும்.

    * மாநிலங்கள் தன்னிறைவு பெற்று புதிய இந்தியா உருவாகும் என நம்புகிறேன்.

    * மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற நிலை தொடர தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×