என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம்.
- மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில்,
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.
மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.
மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது என்று தெரிவித்துள்ளார்.
- சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது.
- போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேல்பட்டி:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது.
சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் போலீஸ் அடிக்கடி இந்த கிராமத்திற்கு ரோந்து வருவார்கள். சாராயம் குடிப்பதற்கும் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரையும் கைது செய்து, அதனை முற்றிலுமாக ஒழித்தனர்.
மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டது என்று பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகை வைத்தனர்.
மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
- நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
* ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.
* ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று கூறினார்.
- மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 69 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1034 கன அடி நீர் வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிற நிலையில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.16 அடியாக உள்ளது. 18.55 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
- வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- அமமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும்.
- அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தனது கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகள் ஆட்சி காலம் ஊழல், முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது பழைய நண்பர். நாங்கள் 2 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். வருகிற 24ந் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் பங்கேற்பேன். அ.ம.மு.க. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும். வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் நாகராஜ், பேரூர் செயலாளர் ராஜா, அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், மாவட்ட செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன், ஒன்றிய செயலாளர்கள் தவசெல்வம், திருமலை, நாகராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. கடந்த முறை ஒதுக்கியதை விட இந்த முறை 2 சீட் குறைத்து 7 தொகுதிகளை கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
- டெல்லியில் இருந்த டி.ஆர்.பாலு எம்.பி. இன்று சென்னை வந்துள்ளதால் மீண்டும் தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.
காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட அதிக தொகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக ஒரு பெரிய பட்டியலை தயாரித்து வைத்துள்ளது. ஆனால் தி.மு.க. கடந்த முறை ஒதுக்கியதை விட இந்த முறை 2 சீட் குறைத்து 7 தொகுதிகளை கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு மாற்றி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவாலய பேச்சுவார்த்தைக்கு வருவாரா? இல்லையா? என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்குவதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவரான தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு பணிகள் காரணமாக பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்த டி.ஆர்.பாலு எம்.பி. இன்று சென்னை வந்துள்ளதால் மீண்டும் தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நாளை மறுநாள் முதல் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளையுடன் முடிவடைவதால் அதன்பிறகு அமைச்சர்கள் அறிவாலயத்துக்கு தினமும் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்பதால் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்று உடனே முடிவு செய்யப்பட்டு விடும் என அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி கட்சியினர் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு எப்போது வரவேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப ஒவ்வொரு கட்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் 2 டன் பீடி இலைகள் கடத்தி சென்ற 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகர், சிலுவைபட்டி மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது19), அபிஷ்டன் (19), மரிய அந்தோணி (20), டிஜோ(24), காட்வே (19) ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கடற்கரை வழியாக படகு மூலம் பீடி இலைகளை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- எருது விடும் விழாவில், சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.
- சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மொத்தம், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கிடா வெட்டி சிறப்பு. பூஜை நடந்தது. அதன்பின் விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.
காளைகள் சீறிப்பாய்ந்த போது, அடக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள், சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.
விழாவில், 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
- பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜனதா உறவை துண்டித்த அ.தி.மு.க. தனி அணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளது.
அ.தி.மு.க.வுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்ற நிலையில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வினியோகம் இன்று தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரொக்கமாக பணத்தை கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர்.
முதல்நாள் என்பதால் பலரும் மனுக்கள் வாங்குவதற்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். இதனால் அ.தி.மு.க. அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. எந்த தொகுதிக்கு போட்டியிட மனு பெறப்பட்டது என்ற விவரத்தை நிர்வாகிகள் பதிவு செய்தனர்.
தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு சென்று இருந்தனர்.
விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலும் தொகுதி பங்கீடு, கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது. இதனால் எந்த தொகுதிக்கு பணம் கட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
- ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.
- தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த தேர்தலுக்கு பிறகு மோடி ஆயுள் தண்டனை பெறுவார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். புதுவைக்கு வரும் கவர்னர்களிடம் சொத்துக்கணக்குகள் கேட்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-
விலை கொடுத்து வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு அந்த எண்ணம் தான் வரும். இன்று ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி முதல் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றவர்கள். அவர்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என்பதையும் வெளியிட்டால் நல்லது.

மற்றவர்களின் சொத்துக்கணக்கை கேட்க ஆசைப்படும் தி.மு.க.வினர் முதலில் அவர்களது பின்புலத்தையும் இப்போதைய சொத்துக்களையும் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.
லாலுபிரசாத் யாதவ் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர். வடகிழக்கு மாநிலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஒரு 350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுக்க ஊழல் செய்பவர்கள் செய்பவர்களோடு கூட்டணி அமைத்து மக்களிடம் ஓட்டு கேட்க போகிறார்கள்.

எப்படி மக்கள் ஆதரிப்பார்கள். ஊழலை ஒழிக்க போராடுகிறார் மோடி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ? என்ற பயத்தில் தான் இப்படி கதறுகிறது. தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.20-க்கும் பார் வெள்ளி ரூ.77,200-க்கும் விற்பனையாகிறது.






