என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் ஒரு வீட்டில் விஷேச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மதிய விருந்திற்கு பிரியாணி ஆர்டர் கொடுத்திருந்தனர். அதன்படி கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பிரியாணி கடையிலிருந்து ஒரு பெரிய அண்டாவில் பிரியாணியை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
காரை அன்வர்அலி (வயது55) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை தொடர்ந்து கார் தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அன்வர்அலி காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார்.
- நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும. 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இது, ஆனால் நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.
மேலும், மஞ்சள் ஏற்றுமதியை பாஜக அரசு தான் ஊக்குவித்துள்ளது. அதனால் தமிழக மஞ்சள் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. அந்த தடையை உடைத்தது பாஜக அரசு தான் என தனது உரையை பேசி முடித்தார் அண்ணாமலை.
- இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
- இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மக்கள் என் மக்கள் நடை பயணத்தின் நிறைவு விழா, பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
* ஜவுளி துறையில் சிறப்பு வாய்ந்த நகராக திருப்பூர் உள்ளது.
* நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதி பெரும் பங்கு வகிக்கிறது.
* நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.
* இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
* இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
* 2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா.
* என் மண் என் மக்கள் யாத்திரை தன்னுடைய பெயராலும் பெருமை பெற்றுள்ளது.
* என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.
* நாடுதான் முதன்மையானது என பா.ஜனதா கருதுகிறது.
* இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள்.
* தமிழ்மொழி, கலாசாரம் மிக சிறப்பானது.
- திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார்.
- பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இதன்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார். அவருடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயணித்தனர். பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the closing ceremony of 'En Mann Ek Makkal' padayatra in Tiruppur, Tamil Nadu. pic.twitter.com/38EwAbaULb
— ANI (@ANI) February 27, 2024
- 40 தொகுதிகளிலும் என்ன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற பட்டியல் சேகரித்து வருகின்றன.
- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தொடங்கி விடும். அதற்கேற்ப பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதற்கான பணியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக தி.மு.க. தொடங்கி விட்டது.
இந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு பதிலாக முக்கிய ஊர்களில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதற்கேற்ப அவரது சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது.
ஆனால் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று வீதி வீதியாக பிரசாரம் செய்ய இருக்கிறார்.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது எப்படி பிரசார வியூகம் அமைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தாரோ அதே போன்று இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக 40 தொகுதிகளிலும் என்ன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற பட்டியல் சேகரித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி நீட் தேர்வு விலக்கு, வெள்ள நிவாரண நிதி வராதது உள்ளிட்ட மத்திய அரசு மீதான பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிடுவது மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தும் கடுமையாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தொடங்கி விடும். அதற்கேற்ப பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் சென்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருப்பதால் அவருக்காக புதிய பிரசார வேன் கோவையில் தயாராகி வருகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரசார வேன் தயாராகி விடும் என்றும் அந்த வேனில் வேட்பாளருடன் நின்று உதயநிதி பேசும் அளவுக்கு நடுவில் இடம் விசாலமாக அமைக்கப்பட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சூலூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு இன்று வருகை தர உள்ள பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
பல்லடம்:
பல்லடம் வரும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் அவிநாசிபாளையம் அலகுமலை நால் ரோட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்முதல் செய்ய வேண்டுமென 2006ல் வழங்கப்பட்ட பரிந்துரையை அன்றைய காங்கிரஸ் அரசும் அமல்படுத்தவில்லை, கடந்த 2014 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்வோம், கொள்முதல் செய்வோம் என விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.
எனவே தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு இன்று வருகை தர உள்ள பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
- விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.
குளச்சல் துறைமுகத் தெருவில் வசிக்கும் ஆண்டனி தாஸ் அல்போன்ஸ் மீன்பிடி தொழில் செய்ய குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்று பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்த் மீனவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் அவர்கள் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிதியுதவி அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

இதனிடையே பிள்ளைத்தோப்பு கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சஜிதாவின் பெற்றோரான முத்துக்குமார்- மீனாவை அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்து விஜய் வசந்த் ஆறுதல் கூறினார்.
- ஜாபர் சாதிக் 3 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
- ஜாபர் சாதிக்குடன் நெருக்கமான தொடர்பில் இருந்த சினிமாதுறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரத்தினையும் ரகசியமாக போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை:
போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கண்காணித்த போது போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் செயல்படுவது தெரிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ந்தேதி போலீசார் அந்த குடோனில் சோதனை செய்த போது அங்கிருந்த சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபூர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் ஜாபர்சாதிக் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ள சம்மனை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர்சாதிக் வீட்டில் ஒட்டி உள்ளனர். இதேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டு உள்ளது.
ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் கடத்தல் பின்னணியில் ஜாபர்சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? யார்? என்ற விபரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஜாபர்சாதிக் 3 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஜாபர்சாதிக் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சினிமா தயாரிப்பாளராக இருந்த ஜாபர்சாதிக்கிற்கு சினிமா துறையிலும், அரசியல் பின்னணியிலும் நட்பு வட்டாரங்கள் பெரிய அளவில் உள்ளன. இதில் போதைப்பொருள் கடத்தல் பின்னணயில் அவரது நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதனால் அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜாபர்சாதிக்குடன் நெருக்கமான தொடர்பில் இருந்த சினிமாதுறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரத்தினையும் ரகசியமாக போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
- டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர்.
- சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம் 'எஸ்' - வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை -கொல்லம் ரெயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரெயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர்.
உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரெயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
- நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
- தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என ஆந்திரா அரசு கூறியிருந்த நிலையில், எந்த விழாவும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு 315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:-
பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.
1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும் என்று கூறியுள்ளார்.
- தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
- இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
சென்னை:
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் தி.மு.க.வுடன் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் உடன்பாடுக்கு வரவில்லை. இந்த கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.
காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கேட்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 இடங்கள் கேட்கின்றன.
ம.தி.மு.க. 2 இடம் வேண்டும் என்கிறது. இந்த கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2 இடம் வேண்டும் என்கிறது. இதனால் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற 9-ந்தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைக்க கேட்டு கொண்டு உள்ளது.
அதன் பேரில் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.






