என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
- சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.
பண்ருட்டி:
பண்ருட்டி காமராஜர் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நகராட்சி தலைவராக இருந்துவந்தார். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம். இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அப்போது கமிஷனராக இருந்த பெருமாள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை பண்ருட்டி சென்றனர். பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் வீடு, பண்ருட்டி 4 முனை சந்திப்பில் உள்ள பன்னீர்செல்வம் அலுவலகம், சென்னையில் உள்ள முன்னாள் கமிஷனர் பெருமாள் வீடு உள்ளிட்ட 5 இடங்களில், காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் பண்ருட்டி கந்தன் பாளையத்தில் உள்ள முன்னாள் ஒன்றிய செயலாளர் மலா பெருமாள் வீட்டிலும், பத்திர எழுத்தர் செந்தில்முருகா, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் மோகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மாலா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆவார். மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.
சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். முன்னாள் நகராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய விவகாரம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பல்லத்திடலும், மதுரையில் அளவற்ற அன்பைப் பெற்றேன்.
- தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பல்லத்திடலும், மதுரையில் அளவற்ற அன்பைப் பெற்றேன்.
தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தில் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். pic.twitter.com/663uYcNjok
— Narendra Modi (@narendramodi) February 28, 2024
- விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
- இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 விமானிகளின் பெயரை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் ஆவார். 19.4.1982 அன்று பிறந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
கடந்த 21.6.2003 அன்று இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் நியமிக்கப்பட்ட இவர், பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
மிகவும் சவாலான பணியான, இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கு 'டெஸ்ட் பைலட்'டாகவும் இருந்துள்ளார்.
இவருக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. பல்வேறு அதிநவீன விமானங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்த இவர், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளார்.
விண்வெளிக்கு செல்லும் விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 47.
விமானி அங்கத் பிரதாப், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 41. விமானி சுபன்சு சுக்லா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 38 ஆகும்.
இவர்களும், இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.
- சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
- 2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.
பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது இருசக்கர வாகன நிறுத்துமிடம் டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும்.
- தற்போது நீர்மட்டம் 2 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளதாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீர் கிடைக்க வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீராணம் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தடைந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு வீராணம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.
மேலும் சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஏரியின் கொள்ளளவு 2 மில்லியன் கனஅடி நீராக குறைந்துள்ளது. நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்ட நீர் 3 அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயி நிலங்களுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
வடலூர் வாலாஜா ஏரியில் இருந்து நீர் எடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா ஏரியின் நீர் ஆதாரம் என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒருமாதமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கையை சேரந்த சாந்தன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சாந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் சாந்தன், ராபர்ட் பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
- பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.
- மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.
பிரசார கூட்டத்தை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி சிறு, குறு தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி அங்கிருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவிலில் வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் பிரதமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதால், பாதுகாப்பு காரணங்களால் இன்று மாலையில் இருந்து பொது மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் இன்று இரவு பசுமலை நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜெயலில் உள்ளார்.
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அப்போதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தில் நாடினார். அப்போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தனது வாதங்களை முன்வைத்தது.
அதேபோல் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறைக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
- மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்
"3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்
சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
- பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் விழா.
- டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க மக்கள் செய்தித் தொடர்பாளரும் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000-த்தின் 2024-25-ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸருமான மேஜர் டோனர் ரொட்டேரியன் டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
அருகில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தொடக்க கல்வி அலுவலர் பேபி மற்றும் பலர் உள்ளனர்.
- ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர்
- எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது என்று மோடி பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
அதில், "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது" என்று மோடி பேசியுள்ளார்.
மேலும், "எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.
- தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜனதா வைத்துள்ளது.
- என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மக்கள் என் மக்கள் நடை பயணத்தின் நிறைவு விழா, பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
* தமிழக தேசிய பக்கம் நிற்கிறது.
* பா.ஜனதாவில் வளர்ச்சி பார்த்து பலருக்கு அச்சம்.
* தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை பா.ஜனதா அரசு அளித்துள்ளது.
* மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்தும் கொடுத்து வருகிறது.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பெரிய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்து திமுக தமிழக அரசுக்கு ஏதும் செய்யவில்லை.
* 1991-ல் நான் ஒற்றுமை யாத்திரை தொடங்கியபோது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.
* என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது.
* மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்
* தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜனதா வைத்துள்ளது.
* பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள்.
* தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.






