என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன.

    இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    • வில்லிவாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 408 வாக்காளர்களுக்கு 244 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் ஓட்டு பதிவாக வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறனர். குறிப்பாக, தென்சென்னை தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 100 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இதில் தி.மு.க.வை சேர்ந்த முரசொலிமாறன் வெற்றி பெற்றார்.

    அதேபோல், கடந்த 10 பாராளுமன்ற தேர்தல்களில் 40 முதல் 60 சதவீத ஓட்டுகள் பதிவானது. எனவே இந்த முறை 100 சதவீதம் ஓட்டுகள் பதிவாவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் 100 சதவீதம் ஓட்டுகள் பதிவாவதற்கு பல்வேறு யுக்திகள் கையாளப்படுகிறது.

    குறிப்பாக 'விரலில் வைத்த மை அடையாளத்தை காண்பித்து செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் வருகிற 20-ந்தேதி ஓட்டல்களில் சாப்பிட செல்லும் போது 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்' என்று செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

    வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் திருவொற்றியூரில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 86 வாக்காளர்களுக்கு 311 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 109 பேருக்கு 237, பெரம்பூர் தொகுதியில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 787 பேருக்கு 284, கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 992 பேருக்கு 239, திரு.வி.க. நகர் தொகுதியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 317 பேருக்கு 181 உள்பட மொத்தம் 14 லட்சத்து 84 ஆயிரத்து 689 வாக்காளர்களுக்கு 1,458 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதேபோல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், விருகம்பாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 78 வாக்காளர்களுக்கு 270 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 355 பேருக்கு 254, தியாகராயநகர் தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 49 பேருக்கு 229, மயிலாப்பூர் தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 453 பேருக்கு 262, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 462 பேருக்கு 261, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்களுக்கு 643 உள்பட மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 வாக்காளர்களுக்கு 1,919 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் வில்லிவாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 408 வாக்காளர்களுக்கு 244 ஓட்டுச்சாவடிகள், அமைக்கப்பட்டு உள்ளன.

    அதேபோல், எழும்பூர் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 700 பேருக்கு 173, துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 624 பேருக்கு 174, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேருக்கு 220 ஓட்டுச்சாவடிகள், ஆயிரம்விளக்கு தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 462 பேருக்கு 239, அண்ணாநகர் தொகுதியில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 502 பேருக்கு 253 உள்பட ஆக மொத்தம் 13 லட்சத்து 43 ஆயிரத்து 167 வாக்காளர்களுக்கு 1,303 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்தவகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்களுக்கு 4 ஆயிரத்து 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி பார்த்தால், சராசரியாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரத்து 33 வாக்காளர்கள் வந்து ஓட்டுகள் போட வேண்டியிருக்கிறது.

    அதிகபட்சமாக தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 ஓட்டுகளுடன், தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 20 லட்சத்து 6 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டியிருக்கிறது. 100 சதவீதம் வாக்கு பதிவாக வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.

    • தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
    • பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு வினியோகித்து வருகிறது.

    சென்னை:

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு வினியோகித்து வருகிறது. இந்த முறையானது பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.
    • அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    குறைவான எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் உள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

    அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். கூடுதல் எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருக்கும் மற்ற மாவட்டங்களில் கூடுதலாக ஒரு அலுவலர் பணியாற்றுவார்.

    வாக்குப்பதிவு அன்று ஏதாவது தனியார் நிறுவனம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி. 'கோடை' சேர்த்து 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம்.

    எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு ஜூன் 4-ந்தேதிக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த முடியுமா? என்றால், தேர்தல் கமிஷன்தான் அதில் முடிவெடுக்கும். ஒருவேளை விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள தேவையான வாக்கு எந்திரங்கள் தயாராக உள்ளன. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம்.

    பாராளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை. எனவே தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் 17-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
    • எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக, அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாமக இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை.

    டெல்டாவை அழிக்க பார்த்த கட்சிகள் திமுக, அதிமுக. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமக தான் வலியுறுத்தியது.

    மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.

    எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர்
    • மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்

    சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

    நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். 

    • இந்தியாவில் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
    • இந்தியாவில் விடியல் ஏற்படுத்த தான், இந்தியா கட்டணியை அமைத்துள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மஞ்சம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    வடசென்னை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, வாக்கு சேகரித்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    கலாநிதி வீராசாமியின் குரல், தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இந்த தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தல், மிக மிக முக்கியமான தேர்தல்.

    இந்தியாவில் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், பல நாட்கள் மக்கள் ஏடிஎம் வாசலில் நின்றனர். பாஜகவும், மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.

    மக்களின் பிரச்சினைகளை முழுதாக அறிந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

    பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும். சென்னையில் 3வது ரெயில் முனையம் கொண்டு வரப்படும்.

    வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள், விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை.

    பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்.

    இந்தியாவில் விடியல் ஏற்படுத்த தான், இந்தியா கட்டணியை அமைத்துள்ளோம்.

    பாஜக தேர்தல் அறிக்கை, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன்.

    மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகின்றனர்.

    சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது தான் பாஜக அரசு. ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் என 2019ல் சொன்னதை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்துள்ளனர்.

    சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது தான் பாஜக அரசு. செய்த சாதனைகள் என சொல்ல பாஜகவிடம் எதுவும் இல்லை.

    சாதி, மதம் என மக்களவை பிளவுப்படுத்தி பிரதமர் மோடி பேசுகிறார். மற்றவர்கள் உண்ணும் உணவை பிரதமர் மோடி விமர்சிக்கிறார். உணவு என்பது தனி மனிதரின் விருப்பம்.

    அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய முடியாது.

    தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு திட்டத்தையாவது பிரதமர் மோடி செய்தாரா ? வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை.

    வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள்.

    சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் மெதுவாக நடப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காததே காரணம். எத்தனை பொய்களை தான் காதுகள் தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா ?

    தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்களை கொடுக்கும் பிரதமர் தான் நமக்கு வேண்டும். மக்களுக்காக பார்த்து பார்த்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    செல்ஃபி எடுக்க கூட ஜிஎஸ்டி போட்டாலும் போடுவார்கள். ஜிஎஸ்டி வரியில் 3 சதவீதம் மட்டுமே பணக்காரர்களிடம் இருந்து வசூல் செய்யப்படுகிறது.

    சிஏஏ சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது. மோடியின் நண்பர்களுக்கு தான் ஜிஎஸ்டி வரியான் பயன்.

    விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆருக்கு பாஜக காவி சாயம் பூசுவதையே கண்டு கொள்ளாமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது.
    • மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மழை வெள்ள பாதிப்புக்கு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது.

    மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது. மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், திமுக அரசு என்ன செய்தது ? விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

    ஊழல் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் லஞ்சம். மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 2,118 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.

    2021 சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக இடையேயான வாக்கு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
    • தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்டோது, பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் நினைவுப் பரிசை வழங்கினர்.

    பின்னர், வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை வணங்கி என் உரையை தொடங்குகிறேன்.

    தென் இந்தியாவின் இந்த பகுதி வீரத்திற்கும், தேசபக்திக்கும் மிகவும் பிரபலமானது.

    வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியர் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்.

    முத்துராமலிக்கு தேவர் தந்த எழுச்சியால், நேதாஜியின் ராணுவத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர்.

    இந்த கூட்டத்தை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். இந்த புத்தாண்டு தினத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவாதம் அளித்துள்ளோம்.

    திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

    தமிழகத்தில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

    தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

    பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.800 கோடிக்கு நிதியுதவி அளித்துள்ளோம்.

    தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி.

    செங்கோலாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டாக இருக்கட்டும், திமுக அதனை எதிர்த்துள்ளது.

    பாஜக தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது
    • இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது.

    இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கவர்னர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
    • அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    ×