என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ரெயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.
இதை மீறுபவர்கள் ரெயில்வே சட்டப்பரிவின் கீழ் கைது செய்து அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், ரெயில் பயணத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. மேலும் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
- எங்களை எல்லாம் சோகத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
- முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படும்.
சென்னை:
மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
"முரசொலி செல்வம் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ந்துவிட்டேன். என்னால் நம்பமுடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக்குறைவும் கிடையாது. எங்களை எல்லாம் சோகத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர். மறைவதற்கு முன் முரசொலி செல்வம் என்னிடமும் பேசினார். முரசொலி செல்வம் மறைவுக்குப் பிறகு என் மனது உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து எப்படி மீள்வது என தெரியவில்லை.
முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படும். திராவிட இயக்கத்தை சேர்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கபடும். இந்த பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தக்கூடிய திமுக முப்பெரும் விழாவில் வழங்குவது என முடிவு செய்திருக்கிறோம்."
இவ்வாறு அவர் பேசினார்.
- லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.
போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் தலைமறைவானார்கள் .
போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் என்பவர் மன்னிப்புக் கேட்ட வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், "20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
- மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு இர்பான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.
பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.
இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.
- அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஒருநாள் பெய்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது. இது வெறும் டிரெய்லர் மட்டும் தான். டிசம்பர் மாத காலங்களில் பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகுது என தெரியவில்லை.
ஒரு நாள் மழைக்கே தமிழக அரசின் சாதனையென்று சொல்லி கொண்டு இருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெருமழைக்கு தயாராக வேண்டும்.
ஒரு நாள் பெய்த மழைக்கு படகுகள் மற்றும் தீபாவளிக்காக பஸ்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதுவரைக்கும் பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.
தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் தூர்தர்ஷன் ஊழியர்கள் பாடியது தவறு. அவர்கள் தவறு செய்துவிட்டனர் என மன்னிப்பு கேட்டு விட்டனர். இதற்கும் கவர்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் கவர்னரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில் தி.மு.க. அரசு அரசியல் செய்து வருகிறது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் நிலவிக் கொண்டுள்ளது.
மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. விவசாயம் இல்லை. நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
இந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் இதுவரைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. இந்த அரசு வெறும் வாய் அரசியல் செய்து கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
- லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.
போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் தலைமறைவானார்கள்.
போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் ஓவராக பேசிவிட்டேன் என்று அந்த ஜோடி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய பெட்டகம்.
- தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்புக் கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம் பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம் பெற்றுள்ளன.
இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
இந்த விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளது.
- மதுபோதையில் போலீசாரை அநாகரீகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த ஜோடி தலைமறைவானது.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.
போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த ஜோடி தலைமறைவானது. இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள ஓட்டலில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
- சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஹினில்அன்சாரி-நசீரான்கதூம். இவர்களது மகள் அப்சார்கதூம் (வயது 4). இவர்கள் வால்பாறை ஊசிமலைமட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அவர்கள் தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு வந்த ஒரு சிறுத்தை குழந்தை அப்சார்கதூமை தாக்கி கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், சிறுத்தையை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் பொருத்தி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரிகள், "வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ள 6 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி உள்ளோம். கண்காணிப்பு காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவான உடன் அந்த பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் புதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. வீட்டில் இருந்து வெகுதொலைவில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுத்தையை பிடிக்கும்வரை சம்பவம் நிகழ்ந்த தேயிலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டாமென சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.
- அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகை கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுவது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி. அதிமுகவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.
- திருப்பூரில் அதிகபட்சமாக உடுமலை பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.
இந்தநிலையில் சோளிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் தனது தாயார், மனைவி மற்றும் மகளுடன் அனுப்பர்பாளையம்புதூர்-15 வேலம்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரில் அவருடைய கார் சிக்கிக்கொண்டது. இதனால் காருக்குள் இருந்த செந்தில்குமார் உள்பட 4 பேரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் சுப்பையா தலைமையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காருக்குள் இருந்த 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் மழைநீரில் தத்தளித்து கொண்டிருந்த காரையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலை பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக அமராவதி அணைக்கு வினாடிக்கு 748 கன அடி நீர் வரத்து உள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை 85 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் எந்நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்துள்ள மகாலட்சுமி நகர், கவிதா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்ததாகவும் ஒவ்வொரு முறை மழை பொழிவின்போதும் வீடுகளில் மழை நீர் சூழ்வதால் கடும் அவதி ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று காலை திருப்பூர்-அங்கேரி பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுவதால் உடனடியாக சாக்கடை கால்வாய் உயர்த்தி கட்டப்படும் என அறிவித்து அதற்கான பணிகள் துவங்கும் என அறிவித்தனர். எனினும் இது நிரந்தர தீர்வு இல்லை எனவும் தங்களுக்கு முழுமையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
திருப்பூர் வடக்கு - 72, குமார்நகர்- 84, திருப்பூர் தெற்கு - 9, கலெக்டர் அலுவலகம் - 92, அவிநாசி- 15, ஊத்துக்குளி-42, பல்லடம் 16, தாராபுரம் -11, மூலனூர்- 42, குண்டடம்- 33, உப்பாறு அணை - 8, காங்கயம்- 22, உடுமலை- 118, அமராவதி அணை- 54, திருமூர்த்தி அணை - 105, மடத்துக்குளம்-20 . மாவட்டம் முழுவதும் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது.
- மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் பிற்பகலில் ராதாபுரம் பகுதியில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு சுமார் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியிலும் சாரல் அடித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. எனினும் மழை பொழிவு எதுவும் இல்லை. பாபநாசம் அணையில் தற்போது 93.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் 105.18 அடியும், மணிமுத்தாறில் 63.64 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது. அதிகபட்சமாக கருப்பாநதியி 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், சங்கரன்கோ விலில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது.
இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 7.5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கயத்தாறில் 37 மில்லிமீட்டரும், கடம்பூரில் 41 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டையபுரம், காடல்குடி பகுதிகளில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கீழ அரசடி பகுதியில் சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது. விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் வெயில் அடித்தது.






