என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அண்ணாவின் அத்தகைய இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா?
- மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தி.மு.க. அரசு அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை:
மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்கவும், அதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்கவும் தி.மு.க. அரசு ஆயத்தமாகி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தி.மு.க. அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அண்ணாவின் உயிர்க்கொள்கை இருமொழி கொள்கை என்று கூறிவிட்டு மறைமுகமாக மும்மொழி கொள்கையை தி.மு.க. அரசு திணிக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நடைமுறையில் இருந்துவருகிறது. இந்திய ஒன்றியத்தை ஆண்ட அன்றைய காங்கிரஸ் அரசும் அதற்குத் துணைநின்ற தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசும் இந்தி மொழியை வலுக்கட்டாயமாகத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாயப் பாடமொழியாகத் திணிக்க முயன்றபோது, துணிந்து எதிர்த்து நின்று போரிட்டு வென்றது தமிழர் மண்.
உயிர்மொழியாம் நம் தாய்மொழி தமிழ் காக்கும் அம்மொழிப்போரில் மானத்தமிழ் மறவர்கள் தீரத்துடன் தங்கள் இன்னுயிரை ஈகம் புரிந்தனர். அவர்களின் தன்னலமற்ற ஈகத்தினைத் தங்களுக்குச் சாதகமாக்கி, ஆட்சி - அதிகாரத்தை அடைந்த அண்ணா தலைமையிலானா தி.மு.க. அரசு, தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கையாக நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்தது.

அதன்படி திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்ட கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருமொழிகொள்கையை நடைமுறைப்படுத்தி, பல தலைமுறைகள் பாடம் பயின்று பட்டம் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது பச்சைத்துரோகம் இல்லையா?
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உதவ தமிழ், ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டும் போதாதா? இந்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாட்டில் இந்தி தெரிந்த பெண்கள் மட்டும்தான் வந்து வாழ்கிறார்களா? இதர மொழி பேசும் பெண்கள் வந்து வாழவில்லையா? அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு உதவ அந்தந்த மொழிகள் தெரிந்த பெண்களை நியமிக்க வேண்டி வருமே? அதனால்தான் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ள தமிழ், இதர மாநில மக்களைத் தொடர்புகொள்ள ஆங்கிலம் என்பதுதானே அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கியது? அண்ணாவின் அத்தகைய இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா?
ஏற்கனவே, தமிழ்நாடு அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை பணிகளுக்கு சமஸ்கிருதம் தெரிந்தால்தான் விண்ணப்பிக்க முடியும் என்று மும்மொழியைத் திணிக்க தி.மு.க. அரசு முயன்றபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டித்து எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கவுள்ள பெண்களுக்கான உதவி மையத்திலும் இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது அப்பட்டமான இந்தி திணிப்பே அன்றி வேறென்ன?
ஏற்கனவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளுக்குப் போதிய நிதியை ஒதுக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்கவும், அதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்கவும் தி.மு.க. அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன் முன்னோட்டமே இத்தகைய இந்தி திணிப்பு அறிவிப்புகளாகும்.
ஆகவே, மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற தி.மு.க. அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும் எனவும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.
- ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேம்பாலம் கட்டும் பணியினை கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேற்கொள்ள உள்ளதால் இப்பணியின் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, 06.11.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போதுள்ள ஒருவழி போக்குவரத்தும், இதனையடுத்து, பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும்.
* ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.
* மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும் அவர்கள் ஏ.ஏ. சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.
* கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை - காந்தி ரவுண்டானா - பேசின் பாலம் - வியாசர்பாடி புதிய பாலம் - மார்க்கெட் முத்து தெரு - மூர்த்திங்கர் தெரு - வலது எருகஞ்சேரி சாலை வழியாக இலக்கை அடையலாம். போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சித் தலைவர்கள் பட்டியல் ஒன்றை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
- நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் முறையே 6 மற்றும் 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்தியா டுடே ஒவ்வொரு ஆண்டும் ஆளுமை மிக்க அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியா அதிகார வலிமை மிக்க 20 அரசியல் கட்சித் தலைவர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் அரசியலில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்தியா அதிகார வலிமை மிக்க 20 அரசியல் கட்சித் தலைவர்கள் பட்டியலில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பிரதமர் மோடி, மோகன் பகவத், அமித்ஷா ஆகியோர் முதல் 3 இடங்களையும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி (4) மற்றும் சந்திரபாபு நாயுடு 5ஆவது இடத்திலும், நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் முறையே 6 மற்றும் 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
- முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவிப்பு.
- முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் .
முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிப்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்கள்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
- மதுரையில் உள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
இருவர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நாளை அதிபர் தேர்தல் இந்நிலையில், அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற மதுரையில் உள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
- அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது
- என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.
நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.
அப்போது கஸ்தூரியிடம் குறுக்கிட்டு பேசிய பத்திரிகையாளர் ஒருவர், "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள்" என்று நீங்கள் பேசியதாக கூறினார்.
அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அப்படி எதுவும் தான் சொல்லவில்லை என்று மறுத்து பேசினார். நேற்று தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு இன்று கஸ்தூரி அப்படி எதுவும் தான் பேசவில்லை என்று மாற்றிப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்தூரி நேற்று தெலுங்கர்களை இழிவாக பேசிவிட்டு இன்று அப்படி பேசவே இல்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.
- முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.
பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த வாரம் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் நண்பர் விஜய். அவர் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கார். ஆனால் இந்த தீர்மானங்களை பார்க்கும்போது நீங்கள் திமுகவுடன் சேர்ந்திடலாம் என்று தோன்றுகிறது.
காரணம், திமுக இத்தனை நாட்களாக சில விஷயங்களை கிளி பிள்ளைப்போல் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அதையே இப்போது விஜய் சொல்கிறார். பாஜக சொல்லிக் கொண்டிருப்பதையே அவர் சொல்லி வருகிறார். இதை விரிவாக எடுத்துக்கூற எதுவும் எல்லை.
திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.
பாஜகவுக்கு எத்தனை பி டீம்ங்க.. தாங்காது கட்சி. முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.
விஜய் எப்போ ஒன்றிய அரசு என்று சொன்னாரோ அப்போவே அவர் உங்க சித்தாந்தம்தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
- என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க, இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.
நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தெலுங்கு மக்களை இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தெலுங்கு சமூகத்தின் உணர்வுகளை அவமரியாதை செய்யவோ அல்லது புண்படுத்தவோ துணிந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும், குறிப்பாக தமிழக அரசியல் சூழலில். தெலுங்கு சமூகத்தின் பெருமை மற்றும் மதிப்புகள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. மேலும் எங்கள் கவுரவத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
என் தோழி நடிகை கஸ்தூரியின் கருத்து எல்லை மீறிவிட்டது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த வித அவமரியாதையையும் தெலுங்கு சமூகம் பொறுத்துக்கொள்ளாது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
- Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
- அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.
- சீமான் எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும்.
- விஜய் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார். திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.
ஏன் தம்பி என்று சொன்னார் ? பிறகு ஏன் லாரியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். பதில் நான் சொல்லி தேவையில்லை.
எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும். எல்லோருக்கும் பேசுகின்ற சக்தியை கடவுள் வழங்கியிருக்கிறார். அதற்காக நாம், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்கிற கருத்தை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்துக் கொண்டு தான் அரசியலுக்கு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதனால் பொருத்து இருந்து பார்ப்போம்.
இன்னும் வருங்காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். இன்னும் அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். எனவே, நிச்சயமாக வருங்காலங்களில் அவருடைய செயல்பாடுகள், அவர் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
- வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன்.
சென்னை போயஸ் கார்டனில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பேது அவர் கூறியிருபு்பதாவது:-
தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறிவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.
நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்.
மற்ற சமூகங்களையும், பிராமணர்களையும் இழிவுபடுத்தியபோது மக்கள் புரட்சியாக எடுத்து கொண்டனர்.
வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18-ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
சிறப்புத் திட்டத் தகுதிக்காக விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்பட மாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சில நடைமுறைகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன், தனியார் நிலங்களை ஒட்டியுள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இந்த விதிகளின்படி அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நீர்நிலைகளின் எண்ணிக்கை மற்றும் பாசனப் பரப்பு குறைந்து வரும் நிலையில், இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இப்போதுள்ள குறைந்த அளவிலான நீர்நிலைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விடும். இதை அனுமதிக்க முடியாது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.
தமிழ்நாட்டின் இன்றையத் தேவை பாசனப் பரப்பை அதிகரிப்பது தான். அதற்கான புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டுமே தவிர, இருக்கும் நீர்நிலைகளையும் தாரை வார்க்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






