search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America presidential election"

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.
    • குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட திட்டம்.

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

    குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிட கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்பை எதிர்த்து மற்றொரு வரும் அதிபர் தேர்தலில் களம் இறங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தொழில் அதிபரும் மிகப் பெரிய கோடீஸ்வரருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவரது தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோர் மனநல மருத்துவராகவும் பணிபுரிந்தனர்.

    அமெரிக்காவின் சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி புகழ் பெற்ற ஹார்வர்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ஒரு டி.வி. சேனலில் நேரடி நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

    37 வயதான விவேக் ராமசாமி மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகிறது. அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்.
    • டுவிட்டரில் மீண்டும் இணைவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், 'வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை வீட்டில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்' என்றார்.

    2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதில் மீண்டும் இணைவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    ×