அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: கமலா ஹாரிஸை விட டிரம்ப் 7 மாநிலங்களில் முன்னிலை

அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்து.
அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: கமலா ஹாரிஸை விட டிரம்ப் 7 மாநிலங்களில் முன்னிலை
Published on

வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் யார் எவ்வளவு முன்னிலையில் உள்ளனர் என்று அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸை விட ஏழு மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக அட்லஸ் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகும். இந்த மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

இதற்கு முன்னதாக, அயோவா மாகாணத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார்.

2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com