என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அவருக்கு செயற்கை குழாய் மூலம் உணவு கொடுத்து வருகிறோம்.
- என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார்.
சென்னை:
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரது மகள் திவ்யா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
என் அம்மா 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை குழாய் மூலம் உணவு கொடுத்து வருகிறோம். இதனால் என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார். எங்கள் அம்மா கண்டிப்பாக பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
கடலோர தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுதினம் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 14-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 15-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 16, 17-ந்தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன.
- திருடுவதற்கும் திருடுபவன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான் திராவிடம்.
நாகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும்.
* வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. அதிகாரம் என்பது நிலையானது அல்ல.
* தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வரும்போது அனைத்தும் பொட்டலாகி விடும்.
* திருடுவதற்கும் திருடுபவன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான் திராவிடம்.
* அதிமுக தொடங்கிய திட்டங்களை முடித்து வைக்கும் திமுக அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறது.
* கொலைகாரனும் செத்து விழுந்தவனும் ஒன்றா?
* தவெகவில் இருந்து பலர் எனது கட்சியில் இணைகின்றனர் என்று அவர் கூறினார்.
- கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
- அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
- முதலமைச்சரை சந்திக்க செல்லும் போது பரீட்சைக்கு செல்லும் பிள்ளைபோல் தயாராவோம்.
- கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.
கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 413 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மார்ட்டின் குழுமம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி, இந்த பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறைகள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்குள்ள பள்ளியின் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நாங்கள் இதுவரை உங்களை டி.வி.யில் மட்டுமே பார்த்து இருந்தோம். தற்போது நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை அப்பா என்று அழைத்து கொள்ளலாமா என கேட்டு அப்பா என்று அழைத்தது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நாள் மிகவும் நிறைவான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளுமே நிறைவான நாள் தான். ஏனென்றால் நம்முடைய தி.மு.க. ஆட்சியே நிறைவான ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் அதை தான் சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கல்வியில் செய்யும் செலவானது நல்ல சமுதாயம் என்ற வட்டியை தரும். பிள்ளைகள் படித்தால் சமுதாயம் பயன்பெறும்.
பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். படித்து முடித்து நல்ல நிலையை அடையும் போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் பலரை விழுதுகள் என்ற செயலியில் இணைத்துள்ளோம். அதில் 7 லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் பள்ளிக்கு செய்து வருகிறார்கள்.
என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நாங்கள் அவரை சந்திக்க செல்லும் போது, பரீட்சைக்கு தயாராகும் பிள்ளைபோல தயாராவோம். ஏனென்றால் எங்களை விட அவர் அதிகம் தெரிந்து வைத்து இருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால்கூட, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
- கள ஆய்வு குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள ஆய்வு குழுவுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக்குப்பின்னர் அவர் கூறியதாவது:
* மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால்கூட, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
* மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால் ஆய்வு அறிக்கையை வைத்து அப்பகுதியில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்.
* அதிமுக கள ஆய்வு குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
* 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முதலில் கட்சியில் களப்பணி ஆற்ற வேண்டும்.

* அதிமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு டிச.7-ந்தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
* மாவட்டந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
* பாரபட்சம் பார்க்காது அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
* அதிமுக கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
- சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது.
- அரசின் திட்டங்களுக்கு பெயர் வைப்பது தொடர்பாக விமர்சனம் எழத்தான் செய்யும்.
கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி என்னை விவாதத்திற்கு அழைத்தால் செல்ல தயார்.
* அரசு திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன்.
* அரசின் திட்டங்களுக்கு பெயர் வைப்பது தொடர்பாக விமர்சனம் எழத்தான் செய்யும்.
* திட்டங்களுக்கு யார் பெயரை வைக்க வேண்டுமோ அதைத்தான் வைக்க வேண்டும்.
அரசின் திட்டங்கள் குறித்து நேரடி விவாதம் நடத்த முதலமைச்சர் வருவாரா என இபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
- பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை மோடி கூறுகிறார்.
- மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிற சமூக நீதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கி, உரிய பிரதி நிதித்துவத்தை நோக்கமாக கொண்டது தான் சாதிவாரி கணக்கெடுப்பு.
கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும்.
அதனை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி, பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறுகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற பா.ஜ.க.வின் அரசியலை எதிர்த்து தான் தேசிய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக 10,000 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு தம்மை வருத்திக் கொண்ட தலைவர் ராகுல்காந்தியை பார்த்து, மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுவாக, காலநிலை மாறுபடும்போது கண் நோய்கள் ஏற்படுவது வழக்கம்.
- கண்களிலிருந்து வெளியேறும் கசிவுகள் மூலம் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவாக, காலநிலை மாறுபடும்போது கண் நோய்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது விழி வெண்படல அழற்சி காரணமாக கண்கள் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண்கள் ஒட்டிக் கொள்ளுதல், கண் கூசுதல் போன்றவை ஏற்பட்டு, கண் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், பள்ளிகளில் சிறுவர், சிறுமியர் அருகருகில் அமர்ந்து கொள்வதன் காரணமாக அவர்களுக்கு இது விரைவாக பரவுவதாகவும், இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது பாக்டீரியா அல்லது வைரஸ் என்றும், கண்களிலிருந்து வெளியேறும் கசிவுகள் மூலம் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கண் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், கண் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அதற்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம்.
- மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டும் பணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயில்வோருக்கு சாம்பியன்ஸ் கிட் உதவி பொருட்கள் தொகுப்பையும் அவர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் பேசியதாவது:
* தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம்.
* விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம்.
* விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
* மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தொகுப்பான 'சாம்பியன்ஸ் கிட்' வழங்குவதை முதற் கட்டமாக 553 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
இத்தொகுப்பில் பை, நவீன தண்ணீர் பாட்டில், தசைப்பிடிப்பிற்கு ஒத்தடம் கொடுக்கும் பை, தொப்பி, கர்சீப் டவல், வேர்வை உறிஞ்சும் துண்டு, கைக்கடிகாரம் மற்றும் டீ கப் ஆகியவை இடம் பெற்றிருந்தது.
அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-2024-ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு விளையாட்டு வசதிகள் கொண்ட புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் 15 மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு வளாகத்தில் நிர்வாக அலுவலக கட்டிடம், 1500 இருக்கை வசதிகள் கொண்ட கேலரி, ஓடுதளப்பாதை, கால்பந்து மைதானம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கோ-கோ,டென்னிஸ் ஆடுகளங்கள் மற்றும் உடைமாற்றும் அறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை வசதிகள் கொண்ட திறந்தவெளி விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒலிம்பிக் அகாடமி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் ஓர் அங்கமாக, ரூ.6 கோடி அளவில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கபாடி மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தரை தளத்தில் ஒரு கபாடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண், பெண் உடைமாற்றும் அறைகள் கொண்ட வசதியுடன் அமைக்கப்படும்.
நவீன வசதிகளுடன் கொண்ட புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். தற்போது உள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய கூடைப்பந்து ஆடுகளமாக புனரமைக்கப்படும்.
தற்போது உள்ள திறந்தவெளி டென்னிஸ் ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய டென்னிஸ் ஆடுதளமாக மாற்றியமைக்கப்படும்.
- தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது அதே பகுதியில் நீடிக்கிறது.
- குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 2 நாட்களில் மெதுவாக மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
* தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது.
* குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 2 நாட்களில் மெதுவாக மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






