என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிக்கையை டிச.7-ந்தேதிக்குள் தாக்கல் செய்க- கள ஆய்வு குழுவிற்கு இபிஎஸ் உத்தரவு
    X

    மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிக்கையை டிச.7-ந்தேதிக்குள் தாக்கல் செய்க- கள ஆய்வு குழுவிற்கு இபிஎஸ் உத்தரவு

    • மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால்கூட, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
    • கள ஆய்வு குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள ஆய்வு குழுவுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக்குப்பின்னர் அவர் கூறியதாவது:

    * மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால்கூட, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

    * மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால் ஆய்வு அறிக்கையை வைத்து அப்பகுதியில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்.

    * அதிமுக கள ஆய்வு குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

    * 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முதலில் கட்சியில் களப்பணி ஆற்ற வேண்டும்.

    * அதிமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு டிச.7-ந்தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

    * மாவட்டந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    * பாரபட்சம் பார்க்காது அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    * அதிமுக கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×