என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத்தேர்வு நடைபெற இருந்தது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத்தேர்வு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மீஞ்சூர்: மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யா நகர், பி.டி.ஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர். பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 33 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும். இதுதவிர அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
- நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- மாணவர்கள் பாதுகாப்பு காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பத்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரியலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
- யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது.
ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த தவத்திரு தருமபுரம் ஆதீனம் அவர்கள், 'யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை' என்று துவங்கும் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது என பாராட்டினார்.
தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்றும் இன்றும் வருகை தந்தார். தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அப்போது, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களின் தேவாரப் பாடல்களை அவர் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

பின்னர் அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். மேலும், ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.
ஈஷாவிற்கு முதல்முறையாக வருகை தந்த ஆதீனம் அவருடைய அனுபவத்தை பகிர்ந்தார்.
அப்போது அவர், "ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்று திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருமூலர், தாயுமானவர், பதஞ்சலி முனிவர் வரிசையில் நம்முடைய தருமை ஆதீனமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது. இக்கலையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என 4 நிலைகளாக சொல்லப்படுகிறது. அத்தகைய மிகவும் அற்புதமான யோக கலையை சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருவது பாராட்டுக்குரியது.
அதேபோல், நம்முடைய மரபில் சிவபெருமானும் மரமும் ஒன்று. சிவ பெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்சிஜைனை வழங்குகின்றன.
அந்த வகையில், மரங்கள் வளர்க்கும் சேவையை சத்குருவும் ஈஷா யோக மையமும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். நம்முடைய தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், தருமை ஆதீனம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து 60,000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதவிர, நூற்றுக்கணக்கான நாட்டு பசுக்களை பராமரிக்கும் மிகப்பெரிய தொண்டையும் ஈஷா செய்து வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளும் திருமுறைகளையும், தேவாரப் பாடல்களையும் மிக அழகாக பண்ணோடு பாடியது ஆச்சரியமாக இருந்தது.

அகத்திய முனிவர் தோற்றுவித்த அருகி வரும் களரி என்னும் பாரம்பரிய தற்காப்பு கலையையும் இம்மாணவர்கள் சிறப்பாக கற்று தேர்ந்து வருகிறார்கள். களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் முனிவர்களால் அருளப்பட்டவை. அதற்கான முழுமையான பயிற்சிக் களத்தையும் ஈஷா வழங்குகிறது. கராத்தே போன்ற சில நவீன முறைகளை நோக்கியே அனைவரும் செல்லும்போது நம் பாரம்பரியமான தற்காப்பு கலைகளை ஈஷா பேணி வருகிறது.
திருவெண்காட்டில் உள்ள சூர்ய குண்டத்திலும், சோம குண்டத்திலும் கண்ணகி நீராடி விட்டு வழிபாடு நடத்தியதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஈஷாவிலும் சூர்ய குண்டம், சந்திர குண்டம் என 2 குளங்களில் ஆண்களும், பெண்களும் புனித நீராடிவிட்டு தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வணங்கி வழிப்படுகின்றனர்.
இப்படி, யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள்." என மனதார வாழ்த்தி விடைப்பெற்றார்.
மேலும் ஈஷாவின் பணிகளுக்கு திருமுறைகள் சிறுபஞ்ச மூலம் போன்ற பற்பல நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி ஒப்பிட்டு ஆசி நல்கினார்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையையும் ஆதீனம் அவர்கள் இன்று ஆரத்தி காட்டி வழிப்பட்டு தொடங்கி வைத்தார்.
- கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது.
- தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் தணிக்கையின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-
கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று.
இதற்கு எதிராக தமிழக பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளது.
தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். அரசின் நிலை மோசமாக உள்ளது.
அதானியை முதலமைச்சர் சந்தித்ததாக பாஜக ஒரு போதும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமில்லை.
முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததாக பாஜக குற்றம்சாட்டுகிறது.
முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுவாரா ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.
கோவை அவிநாசி சாலையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசுக்கு தெரியவந்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
- வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு அறிவிப்பு.
- கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக (HMV லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV -கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 12.12.2024 காலை 08.00 மணி முதல் 15.12.2024 காலை 08.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதைகளில் செல்வதற்கான கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
* பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர்- வாணியம்பாடி- வேலூர்- ஆற்காடு செய்யாறு - வந்தவாசி வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி- செய்யாறு- ஆற்காடு - வேலூர்-வாணியம்பாடி -பர்கூர் வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர் ஆற்காடு செய்யாறு வந்தவாசி வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களிலிருந்து திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி- செய்யார்- ஆற்காடு- வேலூர் வழியாக செல்லவும்.
*மேற்படி வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான தர்மபுரி - தொப்பூர் - சேலம்- வாழப்பாடி -ஆத்தூர் வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை. திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.
* விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான ஆத்தூர் வாழப்பாடி சேலம் தொப்பூர் -தர்மபுரி வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் திருக்கோவிலூர். மணலூர்பேட்டை சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிகரன், அருள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தின் அப்பேத்கர் சிலை அருகே கார் பார்க்கிங்கில் வைத்து லஞ்ச் பேக்கில் நாட்டு வெடிகுண்டுகள் கைமாறியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது எப்படி ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், வெடிகுண்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு தொடரப்பட்டது.
- டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பான விசாரணையின்போது, " கொடி மரங்களால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது ? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ?" என்று டிஜிபி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாமாக முன்வந்து டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
- இந்த வழக்கு வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
- எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.
மாநில உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
அப்போது அவர், "அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்" என்றார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நம் மாநிலத்தின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.
இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் இந்திய கூட்டணி என்றும் பாடுபடும், இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






