என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழங்கியபடி மலை ஏறி சென்றனர்.
- நாளை முதல் 11 நாட்கள் மகாதீபம் பிரகாசிக்கும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை அண்ணாமலையார் நந்திபகவான் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதன் பின்னர் 40 பேர் கொண்ட குழுவினர் அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு சென்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழங்கியபடி மலை ஏறி சென்றனர்.
மகா தீபம் ஏற்ற 1200 மீட்டர் துணியும், 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும் தயார் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு மகா தீப தரிசனம் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 14 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 116 கார் நிறுத்தும் மையங்கள், 95 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிரிவல பக்தர்கள் இடையூறுகள் இன்றி கிரிவலம் செல்ல காவல்துறை சார்பில் 500 மீட்டருக்கு 6 பேர் நிறுத்தப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிரிவல பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம், கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி உள்ளது.
நாளை முதல் 11 நாட்கள் மகாதீபம் பிரகாசிக்கும். இந்த நாட்களில் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து 3400 சிறப்பு பஸ், 20 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இன்றுமுதல் 2 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- அணையில் தற்போது 88.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன.
- 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன.
தளி:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூர் சானமாவு காட்டிற்கு 32 யானைகள் வந்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன. 11 யானைகள் போடிச்சிப்பள்ளி வழியாக காடு உத்தனப்பள்ளி, ஒன்னு குறுக்கி, கோட்டட்டி வழியாக தேன்கனிக் கோட்டை அருகே உள்ள பேவநத்தம் காட்டிற்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்றன.
அதேபோல 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த யானைகளை ஏற்கனவே சென்றுள்ள 11 யானைகளுடன் சேர்த்து மொத்தம் உள்ள 32 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது அந்த யானையை சின்னக்குத்தி வனப்பகுதிக்கு விரட்டி உள்ளனர். இதனால் சின்னக்குத்தி, பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி, உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- நாளை 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
- கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.
பழனி:
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 7-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலையில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, யாகசாலை, தங்கரதம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று வந்தன.
6ம் நாளான இன்று சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது மூலவர் சன்னதியிலும் கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.
நாளை கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4.30 மணியளவில் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலைக்கு சென்ற பின்பு பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதலும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறும்.
சொக்கப்பனை ஏற்றப்படுவதால் நாளை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை திருக்கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. அதன் பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மலைக்கோவிலுக்கு செல்ல யானைப்பாதையையும், கீழே இறங்குவதற்கு படிப்பாதையையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- நேற்று சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
- நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் கடந்த 3நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து நேற்று சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.
நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
10-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,640
09-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040
08-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
07-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-12-2024- ஒரு கிராம் ரூ. 103
10-12-2024- ஒரு கிராம் ரூ. 104
09-12-2024- ஒரு கிராம் ரூ. 100
08-12-2024- ஒரு கிராம் ரூ. 100
07-12-2024- ஒரு கிராம் ரூ. 100
- தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- புதுச்சேரி காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
13, 16, 17-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
- நீர்வரத்து தொடர்ந்து உயர்வதால் அணையிலிருந்து நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து உயர்வதால் அணையிலிருந்து நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து 2,500 கனஅடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர்.
- திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என கூறியுள்ளார்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
- விமான பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை:
வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, கனமழை காரணமாக சென்னைக்கு வரும் 15 விமானங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு செல்லும் விமானங்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது. இதனால் விமான பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக உள்ள நிலையில் 80 சதவீதம் நிரம்பியது.
- புழல் ஏரியில் நீர்மட்டம் 18.80 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை:
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி விரைந்து நிரம்பி வருகிறது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக உள்ள நிலையில் 80 சதவீதம் நிரம்பியது.
கனமழை காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் விரைவில் முழு நீர்மட்டத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.80 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கான நீர்வரத்து 629 கனஅடியாக உள்ள நிலையில் ஏரியின் பாதுகாப்பு நலன் கருதி அப்படியே வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் தற்போதைய நீர்இருப்பு 2,771 மில்லியன் கனஅடியாக உள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் விட்டுவிட்டு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழை வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலுக்கு சென்றபிறகு மழை குறையும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் 70 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியை ஃபெஞ்சல் புயலுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், சேலம், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.






