சாத்தனூர் அணை நீர் திறப்பு படிப்படியாக உயரும்- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.நீர்வரத்து தொடர்ந்து உயர்வதால் அணையிலிருந்து நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை நீர் திறப்பு படிப்படியாக உயரும்- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Published on

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து உயர்வதால் அணையிலிருந்து நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து 2,500 கனஅடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சாத்தனூர் அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com