என் மலர்
நீங்கள் தேடியது "ஜிடிபி வளர்ச்சி"
- 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கணித்திருந்தது.
- விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.
2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி.ஐ. கணித்ததைவிட அதிகமாகும். பண்ணைத்துறை (farm Sector), வர்த்தகம், ஓட்டல், நிதி மற்றம் ரியல் எஸ்டேட் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 8.4 சதவீதமாக இருந்தது. அதன்பின் ஐந்து காலண்டிற்குப் பிறகு தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் ஆர்.பி.ஐ., 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும், முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்திருந்தது.
டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு தற்போது அமலில் உள்ளது. இதன் தாக்கம் 2ஆவது காலாண்டில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
- பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாளை (ஜூன் 1) மாலை வரை விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தியானத்திற்கு இடையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.
அதில், "அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது
- மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் வேளாண்துறை வளர்ச்சி சரிந்ததே காரணமாக உள்ளது.
நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். மேலும் கடந்த நிதியாண்டில் 8.2 ஆக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போதைய காலாண்டில் குறைந்துள்ளது.
மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி நடப்பு காலாண்டில் 2.0 சதவீதமாகக் குறைந்துள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையேயான காலாண்டிலிருந்த 6.2 சதவீத வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்து நடப்பு காலாண்டில் 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் வரும் திங்கள்கிழமை பங்குச்சந்தை சரிவை சந்திக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
- எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.
மாநில உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
அப்போது அவர், "அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்" என்றார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நம் மாநிலத்தின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.
இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் இந்திய கூட்டணி என்றும் பாடுபடும், இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






