இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிவு.. பாதிப்பை சந்தித்த வேளாண் துறை!

நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளதுமொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் வேளாண்துறை வளர்ச்சி சரிந்ததே காரணமாக உள்ளது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிவு..  பாதிப்பை சந்தித்த வேளாண் துறை!
Published on

நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். மேலும் கடந்த நிதியாண்டில் 8.2 ஆக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போதைய காலாண்டில் குறைந்துள்ளது.

மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி நடப்பு காலாண்டில் 2.0 சதவீதமாகக் குறைந்துள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையேயான காலாண்டிலிருந்த 6.2 சதவீத வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்து நடப்பு காலாண்டில் 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் வரும் திங்கள்கிழமை பங்குச்சந்தை சரிவை சந்திக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com