என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india gdp"

    • 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கணித்திருந்தது.
    • விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

    2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி.ஐ. கணித்ததைவிட அதிகமாகும். பண்ணைத்துறை (farm Sector), வர்த்தகம், ஓட்டல், நிதி மற்றம் ரியல் எஸ்டேட் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 8.4 சதவீதமாக இருந்தது. அதன்பின் ஐந்து காலண்டிற்குப் பிறகு தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

    விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

    கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் ஆர்.பி.ஐ., 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும், முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்திருந்தது.

    டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு தற்போது அமலில் உள்ளது. இதன் தாக்கம் 2ஆவது காலாண்டில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.

    • நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம்.

    புதுடெல்லி:

    நடப்பு நிதி ஆண்டின் (2022-2023) ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம்.

    இதே காலாண்டில் சீனா வெறும் 0.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன்மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முதலாவது காலாண்டில், நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.36 லட்சத்து 85 ஆயிரம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

    கடந்த நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.32 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், 13.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

    பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி-யால் இந்தியாவின் ஜடிபி-யில் 4.80 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநில நிதி மந்திரி அமித் மித்ரா புதுடெல்லியில் நடந்த இந்திய சர்வதேச ஏற்றுமதி கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு 59 நிமிடத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என்று கூறுவது மோசடியானது. இந்த திட்டத்தின் கீழ் இணைய தளம் மூலம் நாட்டில் எங்கிருந்தாவது ஒருவர் கடன் பெற்று இருக்கிறாரா? பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் இந்திய ஜிடிபி-யில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை மாநில அரசில் இழப்பு ரூ.78,929 கோடியாக உள்ளது.

    இந்த இழப்பை மத்திய நேரடி வரிகள் விதிகளின் கீழ் மத்திய அரசு இழப்பீடாக அளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளான ஜப்பான், சுவிட்சர்லாந்தை விட இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளது.



    பணமதிப்பிழப்பு, விவசாயிகள் மற்றும் முறைப்படுத்தப்படாத தொழில்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய அரசு ஸ்திரமாக உள்ளதாக நம்ப சொல்கிறது. ஆனால் தவறான முடிவுகளையும், தோல்வி அளிக்கும் முடிவுகளையும் எடுக்கிறது. சிறுகுறு நிறுவனங்களின் மனதில் பொருளாதார தேக்கம் நிலவுகிறது என்ற மனநிலையை உருவாக்கி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×