வடிவேலு குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன்- நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்திரவாதம்

தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்குஇந்த வழக்கு வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வடிவேலு குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன்- நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்திரவாதம்
Published on

தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com