பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி

விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு தொடரப்பட்டது.டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
Published on

பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது, " கொடி மரங்களால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது ? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ?" என்று டிஜிபி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது, பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தாமாக முன்வந்து டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com