என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும்.

    பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.

    இந்நிலையில், விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.

    இதனால், சென்னை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னை கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், சிக்னல் கோளாறு காரணமாக இயக்கப்படாததால், சுமார் 1.30 மணி நேரமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

    • 2024 மக்களவை தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது நாம் தமிழர் கட்சி.
    • விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்க பரிந்துரை செய்த நிலையில், வேறு சின்னத்தை பரிந்துரை செய்ய கோரிக்கை.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.

    இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி விவசாயி அல்லது புலி ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த சின்னங்கள் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் அல்லது விலங்குகளை அடையாளம் காட்டுவது போல் இருப்பதால், தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற ஏதவாது ஒரு சின்னத்தை பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • மாவட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது.
    • கட்சி விதிப்படி தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தேர்வுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்ட நிலையில், நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் தேர்தல் மூலமாக நிரப்பப்பட உள்ளது.

    இழுபறி உள்ள மாவட்டங்களில் பதவிகள் தேர்தல் மூலமாகவும், மற்று மாவட்டங்களில் ஒரு மனதாகவும் நியமிக்கப்பட உள்ளன.

    கட்சி விதிப்படி தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்.
    • டெண்டர் விடும் வரை இங்கு சுரங்கம் வரப்போவது யாருக்கும் தெரியாது.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் நிச்சயம் வராது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அண்ணாமலை உறுதியாக தெரிவித்துள்ளார்.

    டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று, பொங்கலுக்கு பிறகு மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.

    இந்த இடத்தில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் எங்கேயும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது.

    டெண்டர் விடும் வரை இங்கு சுரங்கம் வரப்போவது யாருக்கும் தெரியாது.

    • திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு தினங்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகிறது.
    • தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    15.01.2025 (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம் ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.01.2025 (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை சந்தித்தார்.
    • மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்ததாக தகவல்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனு" அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
    • சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இதற்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, " பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது.

    அதனால் சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
    • தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

    தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது அநாகரீகச் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

    அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.

    தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை.

    ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.

    அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை.

    ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.

    அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

    சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
    • 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

    இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

    இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

    மேலும், 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இறுதியில், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    • மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
    • தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

    மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    அதன்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

    அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

    இந்நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு தொடர்பாக , சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றார்.

    • புஸ்ஸி ஆனந்த் குறித்து ஆரோக்கியசாமி பேசிய வீடியோ சர்ச்சையானது.
    • சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம்- புஸ்ஸி ஆனந்த்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தின்போது வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி பேசிய ஆடியோ சர்ச்சையானது தொடர்பாக நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்து அறிவுரை வழங்கியுள்ளார்.

    அப்போது புஸ்ஸி ஆனந்த் "சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். காழ்புணர்ச்சியால் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை கண்டு உணர்ச்சிவசப் படக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயைவிட தன்னை முன்னிலைப்படுத்த புஸ்ஸி ஆனந்த் முயற்சிப்பதாக ஜான் ஆரோக்கியசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்து, அறிவுரை வழங்கியுள்ளார்.

    • ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்.
    • எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம் நடத்தினர்.

    எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை.

    முதலமைச்சர்: எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்.

    எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது.

    முதலமைச்சர்: எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.

    நீட் தேர்வு தொடர்பான விவகாதம்..

    எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்கள் இருந்த ஆட்சிதான்

    முதலமைச்சர்: தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை ஏற்கவில்லை. வரவும் விடவில்லை

    எடப்பாடி பழனிசாமி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துபோய்விட்டது. நீங்கள் நூற்றாண்டு நாணயம் வெளியிடும்போது பாஜக அமைச்சரை அழைத்து வெளியிட்டீர்கள்

    முதலமைச்சர்: ஒன்றிய அமைச்சராக உள்ளவரை அழைத்து வெளியிட்டோம். அதில் என்ன தவறு உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள்.

    முதலமைச்சர்: இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார்

    நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது.

    எடப்பாடி பழனிசாமி: தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா?

    சபாநாயகர்: இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லைவ் செய்ய முடியவில்லை. DD அனுமதியின்றி உள்ளே வந்தபோதும் அவர்களை வெளியே அனுப்பினோம். இது குறித்து ஏற்கனவே விளக்கத்தை அளித்துள்ளேன்.

    எடப்பாடி பழனிசாமி: ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை. சபாநாயகர் தமிழில் வாசித்த உரையாகத்தான் கருத முடிகிறது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது.

    ×