என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு' என்று சொன்னது பெரியாரின் பொன்மொழி!
    • நீ பேசு. அது உனக்குத் தரப்படும் கூலிக்கு நீ செய்யும் பிழைப்பு.

    பெரியாரை அநாகரிகமாக விமர்சித்த சீமானை கடுமையாக விமர்சித்து தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    95வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக உழைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் பற்றிப் பேச இந்தக் கழிசடைக்கு அருகதை இருக்கிறதா?

    தன்னைத் தானே மோகித்து – சதா சோற்றைப் பற்றியே சிந்தித்து – அடுத்தவரை மிரட்டியே பணம் திரட்டி – வாயை அடகு வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழும் புதுப் பிராணி ஒன்றைப் பிடித்து பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேச கூலி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆரியக் கூட்டம். அவனுக்கு வெட்கமும் கிடையாது. மானமும் கிடையாது. சூடும் கிடையாது. சொரணையும் கிடையாது. எவன் கொடுத்தாலும் எதிர் வீட்டைப் பார்த்துக் குரைப்பான். எவன் ஏவி விட்டாலும் எதிரே நிற்பவனைப் பார்த்து கனைப்பான்.

     

    உழைக்காமல் உண்டி பெருக்குவதற்கு எது எப்போது பயன்படுமோ, அதை அப்போது பயன்படுத்திக் கொள்பவன் அவன்.

    செத்து மடியும் ஈழத்தமிழன் வீட்டில் இருந்தே சொத்து பறித்து வாழ்ந்தவன். இழவு வீட்டில் காசுக்கு ஒப்பாரி வைக்கப் போன ஒருத்தி, 'பந்தலிலே பாவக்காய்' பாடிய பாட்டை தமிழ்நாடு அறியும். 'பந்தலிலே பாவக்காய்... பந்தலிலே பாவக்காய்' என்று ஒருத்தி ஒப்பாரி வைக்க, 'போகையிலே பார்த்துக்கலாம்.. போகையிலே பார்த்துக்கலாம்' என்று இன்னொருத்தி பாடியதாக ஒரு பாட்டு உண்டு. இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்தான்.

    ஐயோ பாவம்! இவன் பேச்சை உண்மை என நம்பி அந்த மக்கள் பணம் அனுப்பி பிழைக்க வைத்தார்கள். அவர்களது உழைப்பைச் சூறையாடி உண்டு கொழுத்தான். நாள்பட நாள்பட அவர்களுக்கும் இது 'விஷஜந்து' என்று தெரிந்து போனதால் 'டாலர்' அனுப்புவதை நிறுத்தினார்கள். இவனுக்கு டல்லடித்தது பிழைப்பு.

    ஈழத்தமிழரை ஆதரித்துப் பிழைப்பது முடிவுக்கு வந்ததும் ஈனப்பிழைப்பு ஐடியா ஒன்று கிடைத்தது. திராவிட இயக்கத்தை, திராவிடத்தை, தந்தை பெரியாரை, திராவிட இயக்கத் தலைவர்களை திட்டிப் பிழைக்க இங்கே சிலரால் தட்சணை தரப்படுகிறது என்ற தகவல் கிடைத்தது, அந்தப் பக்கம் போனான்.

    'திராவிடத்தைத் திட்ட நாக்கு வாடகைக்கு விடப்படும்' என்பதுதான் அவனது கட்சிக் கொள்கை. இப்படி ஒருவனுக்காகத் தானே அந்தக் கும்பல் காத்துக் கிடக்கிறது. உடனே 'மார்வாடி' மூலமாக காசுகளை அனுப்புகிறது. 'கத்து, காசு'. இதுதான் உத்தரவு. கத்தக் கத்தக் காசு. 'இன்னும் இன்னும்' என்று கத்தச் சொல்கிறார்கள். சவுண்ட்டுக்குத் தக்க அளவில் அமௌண்ட்!

     

    ஒரு விஜயலட்சுமிதான் வெளியில் வந்துள்ளார். அவர் இவனுக்குச் சொல்லும் அடைமொழியை இங்கே நாம் பயன்படுத்த முடியாது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. உடம்பில் உடையில்லை என்பதை உணராதவன். சொரணை சிறிதும் இல்லாதவன். உமிழ்நீரைச் சிறுநீராய் கழிக்கும் கழிசடையவன்.

    'மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒருவனுடன் போராட முடியாது' என்றார் தந்தை பெரியார். அது இவன்தான். மானம் இருந்திருந்தால் விஜயலட்சுமியின் ஒரு வீடியோவுக்கே தலைமறைவு ஆகி இருப்பானே! ஆயிரம் வீடியோக்களில் ஒரு லட்சம் வசைச்சொற்களைக் கேட்ட பிறகும் ஒருவனால் எப்படி மீடியாக்களுக்கு முன்னால் பேட்டி தர உட்கார முடிகிறது.

    தமிழ் நிலத்தில் எத்தனையோ போராளிகளை உருவாக்கியவர் தந்தை பெரியார். முப்பது ஆண்டுகள் ஒரு போராளி அமைப்பை நடத்திய பிரபாகரனையே 'ஹோட்டல் ஓனர்' போல உருவகப்படுத்தி விட்டவன் நீ!

    'தமிழ்நாடு தமிழருக்கே' என முழக்கமிட்டவர் பெரியார். இந்திக்கு எதிராக 1938 முதல் போராடத் தொடங்கியவர் பெரியார். 'தமிழா; தலைநிமிர்!' என்று இயக்கம் நடத்தியவர் பெரியார். இராமாயணம் கோலோச்சிய காலத்தில் திருக்குறளை அந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தவர் பெரியார். தமிழ்நிலம் காத்தவர் பெரியார். 'தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் நான் ஏன் வாழவேண்டும்' என்றவர் பெரியார்.

    ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1919 முதல் தீர்மானங்கள் கொண்டு வந்தவர் பெரியார். அதற்காகவே இயக்கங்கள் கண்டவர் பெரியார். அவரது போராட்டத்தால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதல் திருத்தம் கண்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கியவர் பெரியார். அதைச் சட்டமாக்கியவர் தமிழினத் தலைவர் கலைஞர்.

     

    இப்படி ஒரு சாதனையை உன் வாழ்க்கையில் இருந்து சொல். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிய 'க்ரைம்' நம்பர் வேண்டுமானால் இப்படி அடுக்கலாம். மானங்கெட்டவன்.

    'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு' என்று சொன்னது பெரியாரின் பொன்மொழி!

    நீ பேசு. அது உனக்குத் தரப்படும் கூலிக்கு நீ செய்யும் பிழைப்பு. இதுமாதிரி நடந்த எத்தனையோ விபூதி வீரமுத்துகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டார்கள். பெரியார்தான் மண்ணைப் பிளந்து எழுந்து சிலையாக, மலையாக நிற்கிறார்.

    அவர் மீது செருப்பு வீசிய இடத்தில் இன்று சிலை இருக்கிறது. ஆனால் நீ நடந்த தடத்தில் ஒரு புல் கூட முளைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

    இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

    அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். 



    • விலைவாசி உயர்வுகளை சமாளிக்க முடியாமல், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
    • ஏற்கனவே 1.8 கி.மீ.க்கு ரூ.25, கூடுதல் கி.மீ.க்கு ரூ.12 என்று ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ஏ.ஜாஹூர் ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், போக்குவரத்து துறை ஆணையர், உள்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என அனைவரிடமும் கோரிக்கைகளை வைத்தும் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.

    வீட்டு வாடகை, வாகனங்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, ஆர்.டி.ஓ. கட்டணங்கள் போன்ற விலைவாசி உயர்வுகளை சமாளிக்க முடியாமல், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

    எனவே இதனை சரிசெய்து பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரை புதிய கட்டணத்தில் ஆட்டோவை இயக்க முடிவு செய்திருக்கிறோம்.

    அதன்படி, முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.50, கூடுதல் கி.மீ.க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 1 ரூபாய் 50 காசு, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் இந்த புதிய கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே 1.8 கி.மீ.க்கு ரூ.25, கூடுதல் கி.மீ.க்கு ரூ.12 என்று ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பூந்துறைரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகம் செயல்படுகிறது.

    இங்கு கடந்த 7-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் அவல்பூந்துறையில் உள்ள அவரது வீடு, அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் என்.ஆர். கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரகுநாயக்கன்பாளையத்தில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வ சுந்தரம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல.
    • காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கருத்தியல் விமர்சனங்களை வைப்பது அரசியலில் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு எல்லையை மீறுவது அரசியல் நாகரீகம் அல்ல. பெரியார் தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய ஒரு அடையாளம். இன்னும் சொல்லப்போனால் சமூக நீதிக்கான ஒரு தேசிய அடையாளம். இன்றைக்கு விளிம்பு நிலை மக்களால் போற்றக்கூடியவர். அவர் மீது வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் தவிர்ப்பது அவருடைய எதிர்காலத்திற்கும் அவருடைய அரசியலுக்கும் நல்லது.

    சனாதன சக்திகள் கடந்த 10 ஆண்டுகளாக பெரியார் என்கிற பிம்பத்தை உடைப்பதற்கு நொறுக்குவதற்கு பகிரங்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அல்லது துணை போகின்ற வகையில் சீமானின் வாதம் அமைகிறது. அதுவும் ஆதாரமில்லாத விமர்சனங்களாக இருக்கின்றன. இந்த போக்கை அவர் கைவிடவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

    இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்று அறிவித்துள்ளது அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கி உள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரிதாக்குகிறோம்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸ் திமுக-விற்கு அந்த வாய்ப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று. திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தீவிரமாக பணியாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

    • தி.மு.க. வேட்பாளரை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் குமார் களம் இறக்கப்படுவார் என பேசப்பட்டது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளரை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா, திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 2023-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.

    ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கலும் நேற்று தொடங்கியது.

    மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த தொகுதியில் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என, கள ஆய்வுக்கு சென்ற முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டானிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதேநேரம் அந்த தொகுதியை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.

    அதன்படி இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் குமார் களம் இறக்கப்படுவார் என பேசப்பட்டது.

    ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று இரவு தெரிவித்து இருந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

    • ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.
    • ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    கோவளம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி திருநாளில் ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது.

    பின்னர் திடீரென ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி நிறத்தப்பட்டது.

    மீண்டும் நேற்று ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி தொடங்கியது. நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களும், மீண்டும் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் 6 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி நடக்கிறது. நேற்று ஆன்லைனில் ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்தவர்கள் பலர் ஆா்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர். ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.

    முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்கள் ஹெலிகாப்டர் சவாரி கோவளம் ஹெலிபேடில் வந்து காத்திருந்தனர். ஆனால் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து சரியான சிக்னல் கிடைக்காததால் பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் உல்லாசமாக ஹெலிகாப்டர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    முன்னதாக ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன்சிங் ஆட்சியில் பல்வேறு புரட்சிகரமான மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அத்திட்டங்கள் 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்படி சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு பெறுகிற உரிமைச் சட்டம் ஆகிய இரண்டும் தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் முடக்கப்பட்டு, செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


     ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தகவல் கேட்டு 1 கோடியே 75 லட்சம் மனுக்கள் குவிந்து அதற்கு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, தலைமை தகவல் ஆணையத்தில் 8 தகவல் ஆணையர்களின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் 23,000 மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

    இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு 8 தகவல் ஆணையர்களின் பதவிகளை உடனடியாக நிரப்பவேண்டும் என்று ஆணையிட்டும், அவை நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றன. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வரவேண்டும், அரசு நிர்வாகத்தில் நடப்பதை அனைத்து குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டுவந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு முடக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
    • வரப்பாளையம், சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களில், நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், 19.01.2025 முதல் 25.01.2025 முடிய 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், சூரியநல்லூர், கண்ணன் கோவில், மடத்துப்பாளையம், வரப்பாளையம், வடுகபாளையம் மற்றும் சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
    • கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குலசேகரன்பட்டினம்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கும் அதிகமாக அரித்து சென்றது. அங்கு பாறைகள் தென்படுவதால் அவற்றில் நின்று புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

    இந்த நிலையில் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் இடையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் வடக்கூரை அடுத்த காட்டு பகுதியில் கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை கடல் அலைகள் வாரி சுருட்டின. சரிந்த சில பனை மரங்களை கடல் அலைகள் இழுத்து சென்றன. மேலும் சில பனை மரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.

    குலசேகரன்பட்டினத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இவைகளும் கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


    • சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
    • ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

    இதன்படி சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 10-ந்தேதி (இன்று) முதல் 12-ந்தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.


    இந்த நிலையில், சென்னை பலூன் திருவிழாவை சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மதியம் 3 மணி முதல், பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் டிக்கெட் வாங்கி ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

    ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பலூன்களை பறக்க விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் முயற்சி செய்த பிறகும், பலூன்களை பறக்கவிடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அங்கு காத்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    • வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது.

    இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். இன்று ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாளாகும்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

    ×