என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும்.
- எளிதில் டிக்கெட் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி.
நெல்லை:
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக குறைந்தபட்ச மணி நேரங்களில் செல்லும் வகையில் ரெயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், பயணிகள் இடையே இந்த ரெயில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.50-க்கும், 9.45 மணிக்கு திருச்சிக்கும் செல்கிறது. தொடர்ந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரெயில் மறுமார்க்கத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.
இந்த ரெயிலில் 7 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்நிலையில் இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளாக மாற்றி இன்று முதல் இயக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 15-ந்தேதி முதல் நெல்லை-சென்னை இடையே இரு மார்க்கத்திலும் வந்தே பாரத் ரெயில் 16 பெட்டிகளுடன் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வர இருப்பதால் அதற்கு முன்பாக ரெயில் 16 பெட்டிகளுடன் இயங்க தொடங்கும் என பயணிகள் சந்தோஷமாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பொங்கலுக்கு மறுதினம் முதல் தான் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்தாலும், தொடர் விடுமுறைக்கு பின்னர் சென்னை திரும்பும் போது எளிதில் டிக்கெட் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனிடையே கூடுதல் பெட்டிகளுடன் இயங்க உள்ள வந்தே பாரத் ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளதாக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
- தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.
சென்னை:
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்
அதன் விவரம் வருமாறு:-
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில்,
இந்த சட்டம் தமிழகத்திற்கு மிக முக்கியமான சட்டம். சிறுமிகளை, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் முதல் பின் தொடர்வோருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் அருமையான சட்டம். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) கூறுகையில்,
மரண தண்டனை குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்துகள் பரவிவரும் நிலையில் அது குறித்து மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) கூறுகையில்,
இந்த தண்டனைகள் விரைவாக கிடைப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா? கடுமையான தண்டனைகள் இருந்தாலும் விரைவாக கிடைக்காத காரணத்தினால் குற்றங்கள் பெருகுகின்றனர். சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறுகையில்,
பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் நோக்கத்தில் தண்டனையை அதிகரித்து முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்தால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம், பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவ பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். சாதிமறுப்பு செய்யும் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றையும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மரண தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,
பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எண்ணுபவர் தான் நம் முதலமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கனவிலே கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில்,
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஜி.கே.மணி (பாமக) கூறுகையில்,
இந்த சட்டம் தேவையான சட்டம். மரண தண்டனையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.
இதன்பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- சர்ச்சையான கருத்துக்களை பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திட்டம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் கூறியதாக சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல், எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களையும் பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
இந்த நிலையில் பெரியாரின் நன்மதிப்பையும், அவரது புகழையும் குறைக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தரவுகளும் இன்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சு பெரியாரின் புகழை சீர்குலைப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.
எனவே, சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், ஆதாரமற்ற தரவுகளை கொண்டு அவதூறாக பேசியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி செந்தில், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
- முதலமைச்சர் தேர்தல் யூகங்களும், துணை முதலமைச்சர் தேர்தல் பரப்புரையும் தான் இந்த தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வி.சி.சந்திரகுமார் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தான் இந்த தேர்தல் உடைய கதாநாயகனாக இருக்கப் போகிறது.
அது மட்டுமல்ல இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் யூகங்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையும் தான் இந்த தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது என்றார்.
- அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
- புதுமைப்பெண்கள் திட்டத்தால் மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.
சட்ட சபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "அரசின் திட்டங்களால் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதால் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தால் பலன் அடைந்து வரும் மாணவிகள் 'அப்பா' என்று என்னை அழைப்பதை கேட்டு மகிழ்ந்து போகிறேன்" என்றார்.
இவ்வாறு பேசும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் தொடர்ந்து அவர் பேசினார்.
- பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
- குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.
மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.
குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.57,720-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,800-க்கும் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,520-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,315-க்கும் விற்பனையாகிறது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080
08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
07-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720
06-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-01-2025- ஒரு கிராம் ரூ. 101
09-01-2025- ஒரு கிராம் ரூ. 100
08-01-2025- ஒரு கிராம் ரூ. 100
07-01-2025- ஒரு கிராம் ரூ. 100
06-01-2025- ஒரு கிராம் ரூ. 99
- புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன.
- நான் பிறந்தபோது ஸ்டாலின் என்று பெயர் சூட்டிய தலைவர் கலைஞர், வளர்ந்தபோது 'உழைப்பு' னுதான் பெயர் சூட்டினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
என் பதிலுரை வாயிலாக முக்கியமான சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக் கின்ற கைதிகளுக்கு, முன் விடுதலை கிடைக்காத வகையில தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.
இரண்டாவது அறிவிப்பு. மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன.
இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியோடு இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கிறேன்.
மூன்றாவது அறிவிப்பு. பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும்.
நான்காவது அறிவிப்பு. இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும் புதியதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
நான் பிறந்தபோது ஸ்டாலின் என்று பெயர் சூட்டிய தலைவர் கலைஞர், வளர்ந்தபோது 'உழைப்பு' னுதான் பெயர் சூட்டினார். அப்படி உழைக்கக் கத்துக் கொடுத்தவரும் அவர்தான். "ஓய்வெடுத்து உழையுங்கள்" என்று ஆலோசனை சொல்கிறவர்களிடம், 'ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவரின் மகன் நான்' என்று சொல்லுவேன். "தலைவர் பாதையே தனிப்பாதை, கலைஞர் பாதையே வெற்றிப் பாதை" என்று செயல்பட்டு வருகின்றவன் நான். தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக, முன்னோடி மாநிலமாக உயர்த்திக் காட்டுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
- சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமார் (வயது 57) ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வி.சி.சந்திரகுமாரின் மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வி.சி.சந்திரகுமார் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். 1987-ம் ஆண்டு ஈரோடு அ.தி.மு.க வார்டு பிரதிநிதியாக இருந்தார். பின்னர் நடிகர் விஜயகாந்த் மீது கொண்ட பற்றால் விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டார்.
பின்னர் விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய போது வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றினார்.

2008-ம் ஆண்டு ஈரோடு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் பிரிவினருக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
இதன் காரணமாக 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்டார்.
அப்போது அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து தி.மு.க சார்பில் தற்போதைய அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2016-ம் ஆண்டு வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு அணி இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2016-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார். 2021 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும் 2023-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முழு நேரமாக தேர்தல் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
- மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன்.
மதுரை:
மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆணையர் சஞ்சய் ராய், முதன்மை ஆணையர் வசந்தனர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எனது தாய் முருகனை வேண்டிக் கொண்டு வடிவேலு என எனக்கு பெயர் வைத்தார்கள். ஆனால் நாராயணன் என எனது பெயரை உறவினர்கள் மாற்றினர். அப்போதிருந்து உடல்நிலை சரியில்லாமல் போக எனது தாய் வடிவேலு என்ற பெயரே இருக்கட்டும் என கூறினார். அவரால் தான் தற்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.
பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன். அந்த ஆசை இங்கேயே நிறைவேறி விட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கப் போவேன். முன்பெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் மாட்டை அவிழ்த்து விடுவார்கள்.
மாடு எங்க வருதுன்னு தெரியாது. பின்னால வந்து குத்திட்டு போயிரும். ஆனால் தற்போது கட்டுப்பாட்டோடு மாட்டை அவிழ்த்து விடுகிறார்கள்.
பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டும். அடுத்தடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். சுந்தர் சி யின் கேங்கர்ஸ் படத்திலும், பகத் பாசிலோடு மாரிசன் படத்திலும் நடித்து வருகிறேன். பிரபு தேவாவும், நானும் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளோம்.
வருமான வரித்துறை இருக்கிறவங்ககிட்ட வரியை அதிகமாக போட்டு வாங்கிகோங்க... ஏழைகளுக்கு வரியை பார்த்து போடுங்கள்... விஜய் அரசியல், அஜித் கார் ரேஸ் குறித்து பேச விரும்பவில்லை. மாமன்னன் படத்தில் வருவது போல் வாழ்க்கையில் அதிகளவு கஷ்டப்பட்டுள்ளேன். அதனால் தான் தற்போது காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
- திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எது விடியல் ஆட்சி என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம்.
* பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். காலை உணவு திட்டத்தால் தெம்பாக படிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
* புதுமைப்பெண், மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் அன்போடு என்னை அப்பா அப்பா என்று அழைக்கின்றனர். மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
* விடியல் ஆட்சியாக நாங்கள் சொன்னது மக்களுக்கு விடியல் ஆட்சி, மக்களுக்கு எதிரானவர்களுக்கு விடியலல்ல.
* நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் முகங்களில் வெளிப்படும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சிக்கான சாட்சி.
* அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவர்.
* திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது.
* தமிழ்நாட்டில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்.
* விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் இது விடியல் ஆட்சி என்பதற்கு மக்களின் ஆதரவு தான் சாட்சி என்று அவர் கூறினார்.
- தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை.
- தமிழ்தாய் வாழ்த்தை அவமதிக்க துணிந்துவிட்டார் கவர்னர்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் 'பராசக்தி' பட வசனத்தை மேற்கொள்காட்டி கவர்னரின் செயலை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
* சட்டமன்றத்தில் பல விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறோம்.
* ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றாமல் சென்று விடுகிறார்.
* விதிகளை மாற்றுவதையை வழக்கமாக கொண்டுள்ளார் கவர்னர்.
* சட்டமன்றத்தின் மாண்பை கவர்னர் ரவி மதிக்கவில்லை.
* தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை.
* பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் கவர்னரை இந்த மன்றம் இதுவரை கண்டதில்லை. இனி காணவும் கூடாது.
* தமிழ்தாய் வாழ்த்தை அவமதிக்க துணிந்துவிட்டார் கவர்னர்.
* விடியல் தரபோவதாக சொன்னது மக்களுக்கு தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல.
* நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் முகங்களில் வெளிப்படும் மகிழ்ச்சியே விடியல் என்றார்.






