search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலூன் திருவிழா"

    • பலூன்களில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலரும் விரும்பினர்.
    • பட்டஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டச்சிறா பகுதியில் வயல் வெளியில் தரையிறங்கியது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

    இந்த திருவிழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், தாய்லாந்து, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 8 ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் இடம் பெற்று இருந்தது.

    இந்த பலூன்கள் வானில் பறக்கவிடும் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. பலூன்களில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலரும் விரும்பினர். குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் வெவ்வேறு பலூன்களில் 10 கி.மீ தூரத்துக்கு 100 அடிக்கு மேல் பறந்தபடி பயணித்து உற்சாகம் அடைந்தனர்.

    ஆச்சிப்பட்டி மைதானத்தில் பறக்க தொடங்கும் பலூன்கள் அம்பராம்பாளையம் அருகே பொன்னாயூர் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே தரையிறங்கியது. யானை, புலி, கரடி வடிவிலான ராட்சத பலூன்கள் வானில் உயர, உயர பறந்து செல்வதை பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

    3 நாட்கள் நடந்த இந்த ராட்சத பலூன் திருவிழாவை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவிலான மக்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் வானில் பறந்த பலூன்களை பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.


    நேற்றுமுன்தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ராட்சத பலூன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கன்னிமாரா கிராமத்திற்கு திசை மாறி சென்று விளைநிலத்தில் தரையிறங்கியது.

    இதில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு பலூன் பாலக்காடு மாவட்டம் பட்டஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டச்சிறா பகுதியில் வயல் வெளியில் தரையிறங்கியது.

    திசை மாறிய காற்றின் வேகம் காரணமாக அந்த வெப்ப காற்றழுத்த பலூன் இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் திசைமாறி சென்றது. அதில் பயணித்த பெண் மற்றும் அவரது மகள் பீதி அடைந்தனர்.

    அவர்கள் 2 பேர் மற்றும் பைலட் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை பலூன் திருவிழா நடத்தியவர்கள் மீட்டு காரில் அழைத்து வந்தனர். வயலில் விழுந்த பலூனும் மீட்கப்பட்டது. இப்படி பல்வேறு பரபரப்புடனும், பதட்டத்துடனும் நடைபெற்று வந்த 3 நாள் பலூன் திருவிழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

    • 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
    • யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

    பொள்ளாச்சி:

    சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக சுற்றுலாத்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. சென்னையில் கடந்த வாரம் பலூன் திருவிழா நடைபெற்றது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 10-வது ஆண்டாக நேற்று பலூன் திருவிழா தொடங்கியது.

    3 நாட்கள் நடக்கும் இந்த பலூன் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பலூன்கள் பறந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 6-ம் எண் கொண்ட யானை வடிவிலான ராட்சத பலூன் வானில் பறக்கவிடப்பட்டது.

    இந்த பலூனில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் பைலட்டுகள் இருந்தனர். அவர்களுடன் 2 பெண் குழந்தைகளும் பலூனில் பயணம் செய்தனர்.

    ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த பலூனை தரையிறக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் திசைமாறி வானில் சுற்றி கொண்டிருந்தது.

    பின்னர் திசை மாறிய பலூன் 30 கி.மீ தூரம் தாண்டி உள்ள கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பலூனில் இருந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இதற்கிடையே வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன், வயல் வெளியில் விழுந்த ராட்சத பலூனில் இருந்த ஆண், பெண் பைலட்டுகள், 2 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
    • ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

    இதன்படி சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 10-ந்தேதி (இன்று) முதல் 12-ந்தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.


    இந்த நிலையில், சென்னை பலூன் திருவிழாவை சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மதியம் 3 மணி முதல், பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் டிக்கெட் வாங்கி ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

    ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பலூன்களை பறக்க விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் முயற்சி செய்த பிறகும், பலூன்களை பறக்கவிடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அங்கு காத்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.
    • இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

    கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி10-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் இருந்து வந்த பலூன் பைலட்கள் மூலமாக டைகர், பேபி மான்ஸ்டர்,சீட்டா, மிக்கி மவுஸ், எலிபண்ட், உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டது. 


    விழாவை அமைச்சர்கள் அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்., பின்னர் பலூனில் ஏறி சில மீட்டர் துரம் பறந்தனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் ஷில்பா பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தினமும் மாலை 4மணி முதல் இரவு 9மணி வரை பலூன்கள் வானில் பறக்கிறது. அத்துடன் இசை கச்சேரி, உணவு திருவிழா, கண்காட்சிகளும் நடக்கிறது., நுழைவு கட்டணமாக ஆன்-லைன் மற்றும் நேரடியாக பெரியவர்களுக்கு ரூ.200ம், சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் என கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.

    • 10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது.
    • சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

    சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி 10 முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி கூறும்போது, 'மதுரையில் முதன்முறையாக பலூன் திருவிழா நடக்க உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளின் ஹாட் ஏர் (வெப்ப காற்று) பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகம் வந்துள்ளனர். மேலும் மிக்கி மவுஸ், டைனோசர் உள்பட பல்வேறு வடிவங்களிலும், தனித்துவமான வண்ணங்களிலும் பலூன்கள் பறக்க விடப்படுகிறது' என்றார்.

    • பிறமாநில சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை மதுரைக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
    • சுற்றுலாத்துறை அங்கு மாதம் தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை தஞ்சை பெரிய கோவிலுக்கு அதிகம் பேர் வருகின்றனர். பிறமாநில சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை மதுரைக்கு அதிகம் பேர் வருகின்றனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றூலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் சுற்றுலாத்துறை, சுற்றுலாக்களை திட்டமிட்டு வருகிறது.

    மதுரையை பொறுத்தவரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி. எனவே அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது வெளிநாடு சுற்றுலா பயணிகளை, சுற்றுலாத்துறை அழைத்து வருகிறது. அங்கு தற்போது அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் சுமார் ரூ.45 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. மற்ற மாதங்கள் முழுவதும் அந்த மைதானத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை.

    எனவே சுற்றுலாத்துறை அங்கு மாதம் தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கு தமிழக அரசும் அனுமதி தந்துள்ளது.

    உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உண்டு. கடந்த 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.

    அடுத்த ஆண்டு (2025) தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் தேதியை அதிகாரபூர்வமாக தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவிற்கான டீசரும் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.

    • பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா 8-வது ஆண்டாக நடக்க உள்ளது.
    • நெதர்லாந்து பலூனை பெண் விமானியான டிரிண்ட்ஸ்ஜே ஆப்ரிங்கா பறக்க விட உள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றிலும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும்.

    அங்கு வீசக்கூடிய தென்றல் தவழக்கூடிய காற்றினையும், இயற்கை அழகு நிறைந்த பகுதியையும் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்தும் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், உள்ளூர் பொதுமக்களை கவரும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் தனியார் அமைப்பு சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த பலூன் திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை மேற்கொள்கின்றனர். இது பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இதனால் பலூன் திருவிழாவை மக்கள் ரசிக்க முடியாமல் இருந்தனர். இந்த ஆண்டு பலூன் திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதுவரை தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வந்த பலூன் திருவிழாவை முதல் முறையாக தமிழக அரசின் சுற்றுலாத்துறை இணைந்து நடத்த உள்ளது.

    பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டியில் வருகிற ஜனவரி மாதம் 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா நடக்க உள்ளது. பலூன் திருவிழா நடக்க உள்ள இடம் அதிகமான காற்று வீசக்கூடிய இடமாகும். இதனால் பலூன்கள் பறப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

    13-ந் தேதி தொடங்கும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, வியட்நாம், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட 9 நாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டு வரப்பட்டு பங்கேற்க உள்ளன.

    3 நாட்கள் நடைபெறும் இதில் ஒவ்வொரு நாளும் மக்களை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஒவ்வொரு விதமான இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. குழந்தைகளை கவருவதற்காக பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    பொள்ளாச்சியில் நடைபெறும் பலூன் திருவிழாவை காண்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து மக்கள் வருவார்கள்.

    தற்போது பலூன் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து தனியார் அமைப்பு நிறுவனம் செய்து வருகிறது. பலூன் திருவிழாவில் உணவு உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகளும் அமைக்கப்படுகிறது. தற்போது அந்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பலூன் திருவிழாவை அரசுடன் இணைந்து நடத்த உள்ள தனியார் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:-

    பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா 8-வது ஆண்டாக நடக்க உள்ளது. பலூன் திருவிழாவானது 12-ந் தேதியே ஆரம்பமாகி விடுகிறது. 13-ந் தேதி முறைப்படி திருவிழா தொடங்குகிறது.

    இந்த திருவிழாவில் 9 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பலூன் திருவிழாவில் கனடாவை சேர்ந்த ப்ளூ பியர், பெல்ஜியத்தை சேர்ந்த ஸ்மர்ப், பிரேசிலை சேர்ந்த டினோ என 3 தனித்துவமான பலூன்களும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்க உள்ளன. குறிப்பிடத்தக்க அம்சமாக நெதர்லாந்து பலூனை பெண் விமானியான டிரிண்ட்ஸ்ஜே ஆப்ரிங்கா பறக்க விட உள்ளார்.

    விழாவில் மக்களை மகிழ்விக்கும் விதமாக முதல் நாளில் தைக்குடம் பிரிட்ஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 2-வது நாளாக ராஜேஷ் வைத்யாவின் ப்யூசன் நிகழ்ச்சி, நித்யா வெங்கட்ராமன், ஆதித்யா ஆர்.கே உள்ளிட்ட பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது.

    இதுதவிர குழந்தைகளுக்கு பிடித்த, அவர்கள் விளையாடி மகிழும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் பலூன் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்சிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 10 பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன.
    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகைத் தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், 2023-ம் ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் ஜனவரி 13-ந்தேதி தொடங்க உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்சிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 10 பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன.

    இதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகைத் தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெறும் திருவிழாவில் தினசரி, காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பலூன்கள் பறக்கவிடப்படும் என்றும், சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×