என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 17வது நாளை எட்டியது
    • 11 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளார்

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த வார தொடக்கத்தில் டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 17வது நாளை எட்டியது. அவர் தற்போது மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியுள்ளார்.

     

    ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புலம்பெயர் இந்தியர்களும் ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    உண்ணாவிரதம் இருக்கும் தலேவால் 11 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளார் என்றும் அவரது இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது என்றும் அவருடன் இருக்கும் சக விவசாய தலைவர் தெரிந்தார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

     

    விவசாயிகளின் 13 அம்ச கோரிக்கைகளில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு, போராடிய விவசாயிகளுக்கு எதிரான போலீஸ் வழக்குகளை  திரும்பப் பெறுதல் மற்றும் 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகியவை அடங்கும்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள டிகுனியா அருகே உள்ள பன்பீர்பூர் கிராமத்தில் அக்டோபர் 3, 2021 அன்று விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர். அதில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.

    • தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.
    • ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் சந்தித்த பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலமாக வந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி  அனைவரையும் திருப்பிப் பார்க்க வருகிறது.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார். துபாயில் பணிபுரிந்து வரும் தீபக் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பஞ்சாபை சேர்ந்த மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 3 வருடமாக நேரில் சந்திக்காமல் இன்ஸ்ட்டாகிராமிலேயே சாட்டிங் மூலம் இவர்கள் உறவு வளர்ந்துள்ளது.

    கடைசியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டாரும் போனிலேயே பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். மன்பிரீத் கவுர் ஊரான மோகாவில் ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்தில் வைத்து டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. எனவே தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.

     

    ரோஸ் கார்டன் பேலஸ்க்கு உங்களை கூட்டிவருவதற்காக ஆள் அனுப்பியுள்ளதாகப் பெண் வீட்டார் போனில் தெரிவித்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாக காத்திருந்தும் யாரும் வராததால் மாப்பிளை வீட்டார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர்.

    அப்போது ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மணமகள் மன்பிரீத் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. எனவே நிலைமை என்ன என்பதை உணர்ந்த மாப்பிளை வீட்டார் போலீசுக்கு சென்றுள்ளனர்.

    கல்யாண செலவுக்காக பெண் வீட்டாருக்கு ரூ.60,000 கொடுத்ததாக மாப்பிள்ளை தீபக் போலீசில் தெரிவித்தார். தான் மணமகளை நேரில் பார்த்ததில்லை என்றும் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளதாகவும் தீபக் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீஸ் செல்போன் எண்ணை வைத்து மணமகள் குரூப்பை தேடி வருகிறது. 

    • அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் தண்டனை வழங்கியது
    • பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டிருந்தார்

    பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலி தள அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் அக்கட்சியினருக்கு மத முறைப்படி தன்கா [tankhah] தண்டனையை வழங்கியது.

    2015 ஆம் ஆண்டு பஞ்சாப் துணை முதல்வராக இருந்தபோது சிரோமணி அகாலி தல முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல்,  சீக்கியர்களுக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகால்தக்த் அவருக்கு இந்த  தண்டனையை விதித்துள்ளது. 

    இதன்படி  அம்ரிஸ்தரில் பொற்கோவிலில் சேவாதார் ஆக சேவை செய்ய முடிவானது. நேற்று முன் தினம் முதல் இந்த தண்டனையை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடையுடன் பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டுக்கொண்டு கையில் ஈட்டியோடு கோவிலுக்கு காவல் இருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.

     

    அவருடன் ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். அகாலிதளத்தின் மூத்த தலைவரும், பாதலின் மைத்துனருமான பிக்ரம் சிங் மஜிதியா, பொற்கோவிலில் பாத்திரங்களைக் கழுவித் தனது தண்டனையை நிறைவேற்றி வந்தார்.

    இந்நிலையில் பொற்கோவில் வாசலில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் மீது இன்று [ புதன்கிழமை] காலை திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் அருகே நெருங்கிய நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். ஆனால் அருகில் இருந்த ஆதரவாளர் ஓடிச்சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் சுக்பீர் சிங் உயிர்பிழைத்தார்.

    சுற்றியிருந்த மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூடு நடந்திய நபர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பபர் கால்ஸா இன்டர்நேஷனல் (BKI) என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. 

     

    • சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் விலகியுள்ளார்.
    • புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.

    சண்டிகர்:

    சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் செயற்குழுவிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் விலகியுள்ளார். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும். தனது தலைமைமீது இதுவரை நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக சுக்பீர் சிங் பாதல் கூறினார் என பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை மதரீதியாக குற்றமிழைத்தவர் என்றும், அகால் தக்த் அமைப்பின் ஜாதேதார் என அழைக்கப்படும் ஜியானி ரக்பீர் சிங் அறிவித்தார்.

    அகால் தக்த் என்பது சீக்கியர்களின் மிக உயரிய அரசியல் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் ஜாதேதார் என அழைக்கப் படுகிறார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, அகால் தக்த் அமைப்பு சுக்பீர் சிங் பாதலை மதரீதியாக குற்றமிழைத்தவர் என அறிவித்த நிலையில், அவருக்கான மதரீதியான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் சுக்பீர் சிங் பாதல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 28 வயதான சித்து மூஸ்வாலா புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரும் ஆவார்.
    • சித்து மூஸ்வாலாவின் தாயார் செயற்கை கருவுறுதல் முறையில் கருத்தரித்தார்.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா [28 வயது], அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுடன் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சித்து மூஸ்வாலாவின் தாயார் செயற்கை கருவுறுதல் முறையில் கருவுற்று கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    சித்து மூஸ்வாலாவின் சகோதரனான பிறந்திருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு சுப்தீப் சிங் சித்து என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தை சுப்தீப் சிங்கின் புடைக்கப்படத்தை பொதுவெளியில் முதல்முறையாக வெளியிட்டு பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

     

    டர்பன் அணிந்த குழந்தை சுப்தீப் சிங் சித்துவை மடியில் வைத்தவாறு பெற்றோர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், முகத்தில் உள்ள குழந்தைமையை தாண்டி, அதில் தெரியும் விலைமதிப்பில்லாத பிரகாசம், நாங்கள் கண்ணீருடன் கடவுளிடம் ஒப்படைத்த எங்களின் பிரியத்துக்குரியவன் மீண்டும் சிறிய உருவத்தில் எங்களுக்கு திரும்பக்கிடைத்ததாக உணர்த்துகிறது என்று அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. சித்து மூஸ்வாலா தங்களுக்கு மீண்டும் மகனாகப் பிறந்ததாக அவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • உடைந்த நிலையில் கிடந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
    • எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பகுதி அருகே உள்ள வயல்வெளிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின்போது, தனோ குர்த் கிராமத்தின் அருகே உடைந்த நிலையில் கிடந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தானோ காலன் என்ற கிராம் அருகே, சுமார் 540 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்தனர். எல்லை அருகே அடிக்கடி போதைப்பொருள் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இன்று போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வீடு, கோவில், முக்கியமான இடங்களில் தீபம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வரும் நிலையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகயை கொண்டாடி வருகிறார்கள். நாட்டு மக்களுக்கு தங்களுடைய தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அட்டாரி-வாகா எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை பெண் வீரர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

    வீரர் பூனம் சந்த் "நான் பி.எஸ்.எஃப். குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி வருகிறேன். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்கள் பாட்டு பாடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தன்னைப் பார்த்து குறைத்த நாயை பார்த்து தானும் குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான்
    • சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்ததாக 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 சிறுவர்கள் டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்களைப் பார்த்து நாய் குறைக்கத் தொடங்கியுள்ளது.

    அதில் ஒரு 5 வயது சிறுவன் நாய் தன்னை பார்த்து குறைப்பதுபோல் தானும் நாயை பார்த்து குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான். தனது செல்லப் பிராணி கேலிசெய்யப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத நாயின் ஓனர், சிறுவன் என்றும் பார்க்காமல் வெறி பிடித்ததுபோல் அவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சிறுவனை தாக்கிய நாய் ஓனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசும் தெரிவித்துள்ளது.

    • வீட்டில் இருந்த பெண் அதை கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவு அடைத்து நின்று போராடுகிறார்.
    • ஒற்றை ஆளாக திருடர்களை தடுத்து நிறுத்திய பெண்மணிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகிறது.

    பஞ்சாபில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைய முயன்ற மூன்று திருடர்களை பெண் ஒரே ஆளாக தடுத்து நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டுக்குள் நுழைய முயன்ற திருடர்கள் உள்ளே வராமல் கதவைப் பிடித்துக்கொண்டு பெண் போராடும் சிசிடிவி வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடந்த வாரம் வியாழக்கிழமை பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் உள்ள வெர்கா பகுதியில் பட்டப்பகலில் வீடு ஒன்றில் 3 கொள்ளையர்கள் நுழைய முயன்றுள்ளனர். உள்ளூர் நகை வியாபாரி ஒருவர் வீட்டில் இல்லாததை நோட்டம் விட்ட அந்த மூவர் வீட்டுக்குள் வர முயன்ற நிலையில் அவர்களை அந்த வீட்டில் இருந்த பெண் அதை கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவு அடைத்து நின்று போராடுகிறார்.

    இறுதியில் சோபாவை இழுத்து வழியை அடைத்ததாலும் பெண் கூச்சலிட்டதாலும் உள்ளே நுழையும் முயற்சியைக் கைவிட்டு திருடர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பேரின் போலீசார் திருடர்களை தேடி வருகிறனர். இதற்கிடையே ஒற்றை ஆளாக திருடர்களை தடுத்து நிறுத்திய பெண்மணிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகிறது.

    • சம்பவ இடத்தில் 9 இரும்பு கம்பிகள் கிடந்தன.
    • பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் இன்று அதிகாலை பதிண்டா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடப்பதை என்ஜின் டிரைவர் பார்த்தார்.

    ரெயில் மெதுவாக வந்ததால் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். ரெயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


    சம்பவ இடத்தில் 9 இரும்பு கம்பிகள் கிடந்தன. அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். பதிண்டாவின் பாங்கி நகரில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதை கவிழ்க்கும் சதி செயலாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதுபற்றி அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை ரெயில் என்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் தண்டவாளத்தில் கம்பிகள் கிடப்பதை பார்த்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    நாடு முழுவதும் சமீபகாலமாக ரெயில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரெயில்களை கவிழ்க்க செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவை இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் பிரேம்பூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்து அவசர பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று சிலிண்டரை ஆய்வு செய்து தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். ஆய்வு செய்ததில், 5 லிட்டர் சிலிண்டர் காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7 இடங்களீல் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. உரிய நேர்த்தில் தண்டவாளத்தில் கிடந்த பொருட்கள் அகற்றப்பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
    • போலீசார் தர்லோஜனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவடம் ஹனா பகுதி இகொலனா கிராமத்தை சேர்ந்தவர் தர்லோஜன் சிங் (வயது 60). இவர் ஹனா பகுதி ஆம் ஆத்மி விவசாய பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி நிர்வாகியான இவர் தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த தர்லோஜன் சிங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தர்லோஜன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்லோஜனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    • தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஷ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார்.
    • லக்ஷ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    பஞ்சாபில் வழிப்பறி  கொள்ளையர்களால் 12 வகுப்பு மாணவி இரு சக்கர வாகனத்தில் சுமார் 350 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப்  மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இளைய சகோதரியுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 12 வகுப்பு படிக்கும் லக்ஷ்மி என்ற பெண் [18 வயது] சாலையில் நடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் லக்ஷ்மியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஷ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார். லக்ஷ்மியின் கையை பிடித்தபடி அந்த தரதரவென சாலையில் 350 மீட்டர்களுக்கு இழுத்துசென்ற அவர்கள் கடைசியாக அந்த செல்போனை பிடுங்கிக்கொண்டனர்.

    சிறிதுதூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லக்ஷ்மியை பார்த்து மன்னிப்பு விடு [sorry] என்று சொல்லிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன் சென்றுள்ளான். லக்ஷ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த லக்ஷ்மி மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டுளார். லக்ஷ்மியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அந்த காட்சிகளில் அடிப்படையில் கொள்ளையர்களை தேடிய போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். 

    ×